தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழவைக்கும் முருகப் பெருமான்!!
முருகன் பெருமைகள் அவன் அருள் லீலைகள் மாயன் கோவிந்த கோபாலன் ராசலீலைகளை நிகர்த்தவை அன்றோ!
பரமசிவனார் லலாட நயனங்கள் வழி(நெற்றிக் கண்கள்) மலர்ந்து தோன்றிய அனல் ஆறு பொறிகளை வாயுதேவன் ஏந்தி தாங்க ஒணாது சரவணப் பொய்கையில் சேர்க்க அவை ஆறு குழந்தைகள் ஆயின.
மீன்களாக இருந்த கார்த்திகை பெண்கள் சாபம் நீங்கி வணங்கி நிற்க, அன்னை பராசக்தி தோன்றி குழுந்தைகளை ஒன்று சேர வாரி அணைத்து ஸ்கந்தன் எனும் நாமம் தந்து ஞானப் பாலூட்டி மகிழ்ந்தார்!
வானின்ற தேவர்கள் மலர் மாரி சொரிந்து தமக்கு சூரபதுமர் களால் படும் துயர் மாழ சிவகுமரனை தந்த சிவபெருமனை கோடி கோடி நாமங்களால் போற்றி வணங்கினர்! திகழும் இந்து சமயமும் புகழும் தமிழும் யுகம் கடந்து வாழ்பவை.
பார்வதி பாலனாக மாலோன் மருகனாக ஈசன் மகனாக அழகு முருகனை பழகு தமிழால் போற்றி தினமும் வழிபடும் எண்ணற்ற பக்தர்களை ஏற்கணும்
காக்கணும் தெய்வானை மகிழ் வள்ளி மணவாளா!
சூரபத்மன் பாலமுருகப் பெருமானை எதிரே கண்டதும் பாடியது:- கந்தபுராணம்: கச்சியப்ப சிவாச்சாரியார்!
“கோலமா மஞ்சை தன்னில் குலவிய குமரன் தன்னைப்,
பாலன் என்று இருந்தேன் அந்நாள் பரிசு இவை உணர்ந்தி லேன்யான் ,
மால்அயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்,
மூலகாரணமாய் நின்ற மூர்த்தி இம் மூர்த்தி அன்றோ. “
ஆக்கம் – நன்றி:
முருகா சரணம்!
சாமி ரகுபதிக்குருக்கள்.
துன்னாலை, இலங்கை.
பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com

See less