தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன என்று அறிவோம்!!!
உக்ரரத சாந்தி (Ugra Ratha Shanti) என்பது ஒருவரது 59 வயது முடிந்து 60-வது வயது தொடங்கும் போது அல்லது 60 வயது முடியும் தருவாயில் நடத்தப்படும் ஒரு ஆயுள் ஹோம சாந்தி ஆகும்.
இந்து சமய நம்பிக்கைகளின்படி, ‘ரதம்’ என்றால் பல் என்று பொருள்படும். எமதர்மன் உக்ர ரதம், ருத்ர ரதம், பீம ரதம், விஜய ரதம் ஆகிய கால கட்டங்களில் கண்டங்களை ஏற்படுத்துவதாக ஐதீகம் உள்ளது.
60 வயதில் ஏற்படும் ‘உக்ர ரத’ கண்டத்தை நீக்கி, நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறுவதற்காகவே இந்த சாந்தி செய்யப்படுகிறது.
இந்த சாந்தியின் சிறப்பம்சங்கள்:
• காலம்: 59-வது வயது முடிந்து 60-வது வயது தொடங்கும் (பிறந்த நட்சத்திர நாளில்) நாளில் இதைச் செய்வது உத்தமம்.
• பூஜைகள்: கணபதி பூஜை, நவகிரக ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், மற்றும் மிருத்யுஞ்ஜய ஹோமம் ஆகியவை நடத்தப்படும்.
• பலன்கள்: மன அமைதி, தீய விளைவுகளில் இருந்து பாதுகாப்பு, மற்றும் ஆரோக்கியமான நீண்ட ஆயுள் கிடைப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
எமதர்மனின் நான்கு பற்கள் ஆபத்தானவை என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அவை உக்ர ரதம், ருத்ர ரதம், பீம ரதம், விஜய ரதம். ‘ரதம்’ என்பது, அவை பல்லைக் குறிக்கும்.
இவை ஒவ்வொன்றினாலும் குறிப்பிட்ட வயதில் கண்டம் ஏற்படுவதாக இந்து சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் ஆயுள் ஹோமம் செய்வது அவசியமாகிறது!
59 வது வயதில் உக்ரரத சாந்தி, 69ல் ருத்ரரத சாந்தி, 70 ல் பீமரத சாந்தி, 75ல் விஜயரத சாந்தி ஹோமம் என்று வழிபாடுகளை செய்வர்.
பொதுவாக இந்த வகையான அனைத்து சாந்தி வழிபாடுகளும் இந்து சமய சாத்திரங்களின்படி, இவை ஆயுள் விருத்தி ஹோமம் ஆகும். இது முதுமைக் காலத்தில் ஏற்படும் நோய்களைத் தடுத்து, நீண்ட ஆயுளையும், மன அமைதியையும், தம்பதியருக்கு மாங்கல்ய பலத்தையும் தரும் என்பது ஐதீகம்!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின் இதழ் ஆசிரியர். Modernhinduculture.com.

See less