தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
யாகம் என்றால் என்ன? ஹோமம் என்றால் என்ன???
யாகத்திலும் ஹோமத்திலும் அக்னி தேவன்தான் சம்பந்தப்பட்டிருக்கிறார்!
ஹோமம் என்பது இறைவனை வழிபட வளர்க்கப்படும் புனித நெருப்பில், மந்திரங்களைச் சொல்லி பொருட்களை (நெய், மூலிகைகள், தானியங்கள்) இடுவது.
யாகம் என்பது ஹோமத்தை விடப் பெரியது. இது பல நாட்கள், பல வேத பண்டிதர்களால், பெரிய அக்னி குண்டத்தில் செய்யப்படும் நீண்ட காலச் சடங்கு.
ஹோமம்: எளிமையானது: சில மணி நேரங்கள் முதல் ஒரு நாள் வரை நடைபெறும்.நோக்கம்: தனிப்பட்ட நபர்களின் வேண்டுதல்கள் ( நல் வாழ்க்கை அமைந்திட, திருமணத்தடை நீங்க, நல்ல கல்வி கிடைக்க, குடும்பத்தில் அமைதி நிலவ , பிள்ளைகளின் நல் வாழ்க்கை ) நிறைவேறச் செய்யப்படுவது.எடுத்துக்காட்டு: விநாயகர் ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்ரஹ ஹோமம், ம்ருத்யுசய ஹோமம் ! ஆலயங்களில், வீடுகளில், திருமண, உபநயன வைபவங்களின் போது நடை பெறும் .
யாகம் (யக்ஞம்): — பெரியது: மூன்று நாட்கள், மாதங்கள் அல்லது வருடங்கள் கூட நடக்கும்.
நோக்கம்: உலக நன்மைக்காகவும், உலக வாழ் மக்களின் அமைதியான வாழ்க்கை வேண்டியும் , மழை வேண்டியும், நாட்டின் செழிப்புக்காகவும் செய்யப்படுவது.
இந்த யாகத்தின் சிறப்பு: –இதில் பல தெய்வங்கள் வழிபடப்படும். இது அதிக செலவு மற்றும் உழைப்பு கொண்டது. இவை இரண்டுமே அக்னி பகவானை பிரதானமாக வேண்டி வழிபடப்படும்!
ஆதி மனிதனின் வாழ்வில் சூரிய வழிபாடு பிரதானமாய் இருந்தது. நெருப்பின் பயன்பாடு
அறியப்பட்ட பின்னர், நெருப்பினை
சக்தி வாய்ந்த சூரிய கடவுளின் பிரதிநிதியாக கருதினர். இதன் தொடர்ச்சியாக தங்களை காத்துக் கொள்ளவும், தங்களது வேண்டுகோள்களை சூரிய கடவுளின்
கவனத்திற்கு கொண்டு செல்லும் ஊடகமாய் நெருப்பு விளங்கத் துவங்கியது. இந்த புள்ளியில்தான் வேள்வி அல்லது ஹோமங்களின் ஆரம்பப் புள்ளி இருந்திருக்க வேண்டும் என்று கருதப் படுகிறது!
ஒவ்வொரு கடவுளுக்கும், ஒவ்வொரு
தேவதைக்கும் என தனித் தனியானயாக
முறைகள் கூறப் பட்டிருக்கிறது. யாகத்தில் இட வேண்டிய பொருட்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் மாறுபடும். யாகங்களின் மூலம் அந்தந்த தெய்வங்களை திருப்தி செய்து அதன் மூலம் நற் பலன்களைப் பெறலாம்; என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
தமிழர்கள் வாழ்வில் ஹோமச் சடங்குகள் எப்போது துவங்கியது என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை. ஆனால் அகத்தியர் துவங்கி பல சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் இந்த சடங்குகள் குறித்த தகவல்களை அளித்திருக்கின்றனர். அகத்தியர், திருமூலர், போகர், அகத்தியர், புலிப்பாணி, கருவூரார், கோரக்கர் போன்ற பல சித்தர்களின் பாடல்களில் ஹோமம் பற்றிய தகவல்கள் பரவிக் கிடக்கிறது.
ஹோமம் செய்வதன் மூலம் தெய்வங்களை திருப்தி படுத்தி பலன்களை அடைந்திடலாம் என்கிற நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும், சமீபத்தையை ஆய்வறிக்கைகள் ஹோமத்தின் பலன்களை அறிவியல் ரீதியாகவும் நிறுவிக் கொண்டிருக்கிறது. ஹோமத்தில் இடும். பொருட்கள் எரிவதனால் உண்டாகும் வேதிவினைகளின் பலன்களாக பின்வரும் பயன்கள் பட்டியலிடப் படுகின்றன.
ஹோமத் தீயினால் உருவாகும் புகையானது மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களில் நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிப்பதாகவும், மனித உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், ஹோமம் நடக்கும் இடத்தை சுற்றியிருக்கும் நீர்நிலைகள், உண்வுப் பொருட்கள் ஆகியவை நச்சுத் தன்மை அடையாதவாறு பாதுகாப்பதாகவும், காற்றில் பரவியிருக்கும் கரியமிலவாயுவினை சிதைத்து ஆக்சிஜனை அதிகரிப்பதாகவும், ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஹோமத்தில் உருவாகும் புகையானது சூரிய ஒளியோடு கலந்து உருவாகும் ஒளிவேதி சேர்க்கையினால் கதிர் வீச்சுகளில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதாகவும் பட்டியல் தொடர்கிறது. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன ,
இந்த யாகம் , ஹோமம் , அவை சம்பந்தமாகவும் அதன் மூலம் உண்டாகும் புகைகள் , அதன் நன்மைகள் என்ன, என்ன என்று இன்றும் ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன!!!
தொகுப்பு:
பஞ்சாட்சர சுவாமிநாத சர்மா, இணையதள ஆன்மீக மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com
See less
Comments by Dr. N. Somash Kurukkal