தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
பஞ்சபாத்ரம் என்று ஏன் சொல்லுகிறோம்? அதுக்கு ஏன் அப்பெயர் வந்தது?
ஏதும் பஞ்ச லோகம் கலந்த பாத்திரம் என்று சொல்லும் அன்பர்களும் உண்டு!
கடந்த வாரம் எங்களுடைய பதிவு ஒன்றில் உத்தரணி என்று சொல்லப்படும் ருத்ரணி பற்றிய விளக்கத்தைப் பார்த்தோம்.
பஞ்ச பாத்திரத்தை பற்றி மூன்று விதமான விவரங்கள் உண்டு.
முதலில் ஆராதனத்திற்க்கு பயன்படும் அந்த பஞ்ச பாத்திரம் இயற் பெயர் ‘பஞ்ச பத்ர பாத்திரம்’ என்பர் பெரியோர்.
அதாவது அந்த பாத்திரத்தில் ஐவகை பத்திரங்களை(இலைகள்) அதிலுள்ள நீரில் இட்டு அந்நீரை உத்தரணி என்ற சிறு கரண்டியால் எடுத்து பூஜைக்கு, ஆராதனைகளுக்கு பயன்படுத்துவதால் அப்பெயர்.
அது என்ன பஞ்ச பத்ரம்?
அதுவா துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள் என்பர்.
இந்த பத்திரங்களும் தீர்த்தமும் விடப்படும் பாத்திரம் ‘பஞ்ச பத்ர பாத்திரம்’. இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது.
இந்த பத்திரங்கள் மூலிகைகளாகும். இந்த பத்ரங்கள் தெய்வீகமானவை பூஜைகளுக்கு ஏற்றவை.
இப்படியாக ஐந்து இலைகளையும் பகவத் கைங்கர்யத்திற்க்கு அர்ப்பணித்து அர்க்யம்,பாத்யம், ஆசமனியம் என தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
ஶ்ரீ வைஷ்ணவர்கள் விஷ்ணு பகவான் ஆராதனத்திற்கு உகந்தது துளசிதளம் .
ஸ்மார்த்தார்கள் ஆராதிக்கும் சிவனுக்கு உகந்தது வில்வம் என்பர் (பெருமாள் கோவிலிலும் வில்வ அர்ச்சனை செய்வர்).
சிவனின் பத்னியான அம்மனுக்கு வேப்பிலை உகந்தது.
அவரின் புத்திரனான விநாயகருக்கு அருகம் புல் உகந்தது.
படைப்பு தொழிலை கவனிக்கும் பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது.
இப்படியாக ஐந்து பத்ரங்களை ஒவ்வொரு ஆராதனைக்கும் அவரவர்கள் உபயோகிப்பதால் பஞ்ச பத்ர பாத்ரம் என்பர்.
திருவாராதனத்தில் பகவானுக்கு அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நானீயம், சுத்தோதகம் என்று பஞ்ச உபசாரம் செய்ய உபயோகிப்பதால் அந்த ஐந்து நீர்வட்டில் பஞ்ச பாத்ரம் என அழைக்கிறோம்.
பஞ்சபாத்திரம் = பஞ்ச+ பாத்திரம்.
பஞ்சோபசார பாத்ரம் என்றால் என்ன?
அதாவது பெருமாளுக்கு
அர்க்யம் -கைகளை சுத்தம் செய்ய
பாத்யம் – பாதங்களை சுத்திகரிக்க
ஆசமனீயம் – இது ஆசமனம்
ஸ்நானீயம் – திருமேனிக்கு
சர்வார்த்த தோயம் -( அதாவது நமக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தீர்த்தம் சர்வார்த்த தோயம் என்று பெயர் )
மேலே உள்ள உபசாரத்தை தவிர உள்ள மற்ற அனைத்து உபசாரங்களுக்கும் என பயன் படுத்துவதால் அந்த ஐந்து பாத்திரங்களையும் பஞ்ச பாத்திரங்கள் என்பர்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com

See less
சண்டிலிப்பாய் இந்து ஆகம நவீன கலை கலாசார நிறுவன அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் இன்று ஏழாலை அபிராமி அம்மன் ஆலயத்துக்கு ஆன்மீக விஜயமொன்றினை திரு. …

See more