தெரிந்து கொள்வோம் நண்பர்களே,
சித்திரை மாத பரணி நட்சத்திரமும் வைரவர் வழிபாடும்!!!
பரணி நட்சத்திரமும் பைரவர் ஜெயந்தியும் என்று சித்திரப் பரணி நட்சத்திரம் பெருமை பெறுகிறது!!!
பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில்தான் பைரவர் அவதரித்தார்.
பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும். பைரவர் பரணியில் அவதரித்தவர். சித்திரை , ஐப்பசி ஆகிய மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள்.
கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தில் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை!!!
பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான். அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம்.
அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வடைமாலை சாற்ற முடியாதவர்கள் விளக்கேற்றி வழிபடலாம்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com

See less