தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
மற்ற மற்ற சமயங்களில் அவர்கள் சொன்னபடி வணங்க வேண்டியதுதான்!!! ஆனால் சைவ சமயம், இந்து சமயம் என்று வரும்போது அதில் சொல்லப்பட்ட விடயங்களை தமக்கு எல்லாம் என்ற எண்ணத்தில் இருக்கும் அதி மேதாவிகள் சில கேள்வியும் கிண்டலும் செய்வார்கள்!!!
அ‌ம்‌மி ‌மி‌தி‌த்து அரு‌ந்த‌தி பா‌ர்‌‌ப்பது எத‌ற்கு?
அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் என்று சொல்கிறார்கள். இதில் ஐயர் தெரியாத அருந்ததியை காட்டுகிறார் என்ற நையாண்டி செய்பவர்களும் உண்டு அரைகுறை அறிவுடன்!!!
அருந்ததி என்பது நட்சத்திரம். இதனை எப்படி பகலில் பார்க்க முடியும் என்று சிலர் கிண்டலாகக் கூட பேசுகிறார்கள். எமது சமயத்தில் மானசீக வழிபாடு என்று ஒரு விஷயம் உண்டு!! மனதில் இருத்தி வழிபடுவதுதான் அது!!!
ஒன்றை நினைத்து வணங்குதல்தான் முக்கியம். மானசீகமாக நினைத்து வணங்குகிறோம். பகலில் சூரியன் தெரிகிறது. ஆனால் சந்திரன் தெரிவதில்லை. ஆனால் பகலிலும் சந்திரனுக்குரிய மந்திரங்கள் எல்லாம் உண்டு. அதனையும் குருமார் சொல்வார்கள்!.
திங்கட்கிழமைகளில் சோமவாரம், சோம காயத்திரி எல்லாம் சொல்கிறோம். அதுபோல, அருந்ததி நட்சத்திரம் என்பது ஒளிவடிவில் இருக்கிறது. அந்த நேரத்தில் அதனை மானசீகமாக நினைத்து வணங்குகிறோம். அதை புரிந்து வழிபட்டால் சரிதான்!!
அம்மி மிதித்தல் என்பது எல்லாவற்றையும் கடப்பது. மன உறுதிக்காகத்தான் அம்மியை மிதிக்க வைப்பது. அம்மி என்பது என்ன, ஒரே இடத்தில் இருப்பது, அசையாதது என்று பொருள். அடி மேல் அடி அடித்தால்தான் அம்மியும் நகரும் என்று சொல்கிறார்கள். சாதாரண அடிக்கெல்லாம் அது நகராது என்றுதானே அர்த்தம். அந்த உறுதிப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
குடும்பத்தில், கணவர் உட்பட மாமியார், நாத்தனார் என்கின்ற கூட்டுக் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள், பல்வேறு இடையூறுகள், பல்வேறு நன்மைகள் எல்லாமே உண்டு. நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் மன உறுதியுடன் இரண்டையும் சமாளித்து உறுதிப்பாட்டுடன் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது போ‌ன்ற விடயங்கள்!!!
மற்றது, திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது என்பது, தம்பதிகள் வசிஷ்டர்-அருந்ததி போல ஒற்றுமையுடனும், கற்புநெறியுடனும், நிலைத்த அன்புடன் வாழ வேண்டும் என்பதைக் குறிக்கும் ஒரு முக்கியச் சடங்கு ஆகும். அருந்ததி நட்சத்திரம் வானில் வசிஷ்டர் நட்சத்திரத்திற்கு அருகில் காணப்படுகிறது. இது, கணவன்-மனைவிக்கிடையேயான இணை பிரியாத அன்பின் அடையாளமாக, நல்வாழ்க்கைக்காகப் பார்க்கப்படுகிறது.
எதுவும் ஒரு காரணத்துக்காகத்தான் முன்னோர்களினால் சொல்லப்பட்டுள்ளன!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com

See less