கட்டுரை

ஏன் கொலுவில் மண்ணால் உருவாகும் பொம்மைகள் இடம் பெற்றது.?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:- ஒன்பது நாட்கள் கொலுவில் இருந்து பத்தாம் நாள் மூன்று அன்னையர்களும் சேர்ந்து வதம் செய்ய புறப்படுகிறார்கள். இந்த கொலுவில் மண்ணால் செய்யபெற்ற பொம்மைகள் முக்கியத்துவம் பெறுகின்றன ஏன் என்று அறிவோம் நண்பர்களே! தான் உண்டு தன் நாடு உண்டு என்று இருந்த சுரதா என்ற அரசரிடம் எதிரிகள் போர் செய்ய வந்தார்கள். அவர்களிடம் போர் புரிந்து ஜெயிப்பது என்பது ஆகாத காரியம். அத்தனை வலிமை தன்னிடமும், தன் நாட்டிடமும் இல்லை என்பதை உணர்ந்த […]

வள்ளி எந்தப் பக்கம் ,தெய்வானை எந்தப் பக்கம் அமர்ந்து காட்சி தருகிறார்கள் ?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: நண்பர்களே, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியப் பெருமானை நீங்கள் வணக்கும் போது அவதானியுங்கள்! அதாவது வள்ளி எந்தப் பக்கம் ,தெய்வானை எந்தப் பக்கம் அமர்ந்து காட்சி தருகிறார்கள் ? முருகனை வள்ளி தெய்வானை சகிதமாகப் பார்க்கும் போது உங்களுக்கு இந்தக் கேள்வி வந்திருக்கிறதா? வள்ளி வலது பக்கம்; தெய்வானை இடது பக்கம். அதாவது முருகனுக்கு. வள்ளி இச்சா சக்தியையும், தெய்வானை கிரியா சக்தியையும், முருகன் ஞான சக்தியையும் குறிப்பவர்கள். வள்ளி இகலோகத்திலும், தெய்வானை […]

புருவத்தின் மத்தியில் பொட்டு!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: இன்று பலரும் புருவ மத்தியில் பொட்டு இடுவதை பார்த்திருப்பீர்கள். இது பற்றி பிரம்மஸ்ரீ ஷேஷாதிரிநாத சாஸ்திரிகள் என்ன சொல்கிறார் என்று பாப்போம்:- புருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொள்ள லாம், தவறில்லை. புருவ மத்யம், உடம்பில் இருக்கும் மர்ம ஸ்தானங்களில் ஒன்று. அதன் பாதுகாப்புக்குப் பொட்டு உதவும். மஞ்சளில் உருவெடுத்த குங்குமம் தோல் வியாதியை அண்ட விடாது. அங்கு ரோமம் வளராமலும் இருக்கும். ஒரு விஷயம் சட்டென்று ஞாபகத்துக்கு வராமல் தவிப்பவன், தன்னையும் […]

உங்கள் ஜன்ம நட்சத்திரங்களின் காயத்திரி மந்திரங்கள்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:   உங்கள் ஜன்ம நட்சத்திரங்களின் காயத்திரி மந்திரங்களை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் அதை சொல்லி வழிபடுங்கள். அதற்கான நற்பலன்களை பெறுவீர்கள்.       அஸ்வினி:   ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்   பரணி:   ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்   கிருத்திகை:   ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் […]

நம: பார்வதீ பதயே என்பது ஏன்? – விளக்குகிறார் காஞ்சிபெரியவர்*

தகவல் : நன்றி – சாந்த ரூபன் சர்மா அவுஸ்திரேலியா . *நம: பார்வதீ பதயே என்பது ஏன்? – விளக்குகிறார் காஞ்சிபெரியவர்* *சிவன் கோயில்களில் “நம:பார்வதீபதயே’ என ஒருவர் சொல்ல, “ஹரஹர மகாதேவா’ என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்ன?* *பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். “பார்வதீபதி’ என்கிற அவரே உலகுக்கெல்லாம் தகப்பனார். பெரிய தெய்வமானதால் அவருக்கு “மகாதேவன்’ என்றும் பெயர்.* *பூலோகத்தில் ஒரு குழந்தை அவரை “ஹர ஹர’ என்று […]

விநாயகப் பெருமானை ஏன் ‘பிள்ளையார்’ என்று அழைத்து வழிபடுகிறோம்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: விநாயகப் பெருமானை ஏன் ‘பிள்ளையார்’ என்று அழைத்து வழிபடுகிறோம்? முழுமுதற் கடவுள்’ என்று போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். இவருக்குப் பிள்ளையார் என்றும் பெயர். இந்த உலகின் ஜகன்மாதா பார்வதி தேவிக்கும் ஆதியும் அந்தமும் இல்லாத அநாதியான பெருமான் சிவபெருமானுக்கும் பிள்ளை. முதற்பிள்ளை என்பதால் ஆர் என்னும் மரியாதை விகுதி சேர்த்து பிள்ளையார் என்று வழங்கும் வழக்கம் ஏற்பட்டது. விநாயகருக்குச் செய்யும் வழிபாடென்பது ஒருவரை மூவுலகிலும் உயர்ந்து நிற்கச்செய்யும் என்பதை ஔவையார் வாழ்வில் சம்பவம் […]

விநாயகர் வழிபாட்டில் அருகம்புல்லின் மகிமை!

அறுகம்புல்லை `பிள்ளையார் புல்’ என்றே அழைப்பார்கள் பெரியவர்கள். அந்த அளவுக்கு அறுகம்புல் விநாயகர் வழிபாட்டுடன் இரண்டறக் கலந்துவிட்டது. அனலாசுரன் எனும் அசுரன் தேவர்களைத் தாக்கித் துன்புறுத்திவந்தான். தேவர்கள் விநாயகரிடம் முறையிட்டார்கள். விநாயகர் அனலாசுரனுடன் போரிட்டார். விநாயகர் விஸ்வரூபமெடுத்து அனலாசுரனை அப்படியே விழுங்கிவிட்டார். விநாயகரின் வயிற்றுக்குள் சென்ற பிறகும் அனலைக் கக்கினான் அனலாசுரன். கங்கை நீரால் அபிஷேகம்செய்தும் விநாயகரின் வயிற்றெரிச்சல் அடங்கவில்லை. அப்போது, முனிவர் ஒருவர் அறுகம்புல்லைக் கொண்டுவந்து விநாயகரின் தலையில் வைத்தார். அத்தோடு இல்லாமல் அறுகம்புல் சாற்றையும் […]

பரிகாரம் என்றால் என்ன?

*பரிகாரம்* …………………………………………. பரிகாரம் என்றால் என்ன? பசி எடுத்தால் சாப்பிடுவது பரிகாரம். தாகம் எடுத்தால் நீர் அருந்துவது பரிகாரம். நோய் வந்தால் மருந்து சாப்பிடுவது பரிகாரம் . தோசம் என்றால் குறைபாடு என்று பொருள். குறைபாடுகளை சரி செய்வதே பரிகாரம் ஆகும். இயற்கையில் உருவாகும் எந்த ஒரு பொருளையும் மனிதனால் செயற்கையாக உருவாக்க முடியாது . காலில்லாதவன் கம்பு ஊன்றி நடக்கலாம், கால்களை முளைக்க வைக்க முடியாது. கம்புகள் கால்களுக்கு ஈடாகாது. கண் தெரியவில்லை என்றால் ஒரு […]

சுமங்கலி பூஜை எப்படிச் செய்வது? அதன் நன்மைகள் என்னென்ன?*

*நவராத்திரி ஸ்பெஷல்** *சுமங்கலி பூஜை எப்படிச் செய்வது? அதன் நன்மைகள் என்னென்ன?* சுமங்கலி பூஜை, திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளைப் பெறவும், திருமணம் ஆகாத பெண்கள் திருமணத் தடைக்கான தோஷம் போக்கவும் நடத்தப்படுகிறது. ‘சுமங்கலி’ என்றால் மங்கலம் நிறைந்தவள் என்று பொருள். அம்பிகையின் திவ்ய நாமங்களைச் சொல்லி வழிபடும் ஶ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் 967 வது திருநாமமாக உள்ள ‘சுவாஷினி’ என்னும் பெயரில் இருந்துதான் ‘சுமங்கலி’ என்னும் பெயரானது உருவானது. திருமணமான பெண்களை ‘சுமங்கலி’ […]

Scroll to top