கட்டுரை

மகாகும்பாபிஷேகம், மகோத்சவம் நடைபெறும்போது யாக சாலை வழிபாடுகள் !

மகாகும்பாபிஷேகம், மகோத்சவம் முதலிய இறை நிகழ்ச்சிகள் நடைபெறும்போது யாக சாலை வழிபாடுகள், யாக கும்பங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. நாம் அவற்றை அவதானித்துள்ளோம். ஏன் அப்படி யாக சாலை பூஜைகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை அறிவோம் நண்பர்களே! பொதுவாகவே இந்து மதத்தில் உள்ள அனைத்து சடங்குகளுக்கும் மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை. கலசம், அக்னி, வேதியர்( சிவாச்சாரியார்) ஆகிய மூன்றும் இன்றி எந்த ஒரு சடங்கினையும் இந்து மதத்தில் செய்ய இயலாது. இதற்கு கும்பாபிஷேகமும் விலக்கு அல்ல. இறைசக்தியை […]

ஜாதகம் கணிக்கும் போது பிரதான தவிர்க்க வேண்டிய விடயம் இது!

ஜாதகம் கணிக்க என்று பலர் பல ஜோதிடர்களிடம் சென்று வருவதை நாம் பார்த்திருக்கிறோம். ஜோதிடர் சிலர் ஜாதகம் கணிக்கும் போது ஆயுள் சம்பந்தமாக , குறுகிய ஆயுள் அது இது என்று சொல்வதாக தகவல்கள் உண்டு. மதி நுட்பமாக இந்த விடயங்களை சொல்ல வேண்டும் அப்படி சொல்ல முடியாவிட்டால் அவற்றை தவிர்க்க வேண்டும். ஜனனத்தையும், மரணத்தையும் தீர்மானிக்கும் சக்தி இறைவன் ஒருவனுக்கே உண்டு. அதை எந்த ஒரு மனிதனாலும் தீர்மானிக்க இயலாது. அதே நேரத்தில் ஒரு ஜோதிடர், […]

சனி பகவான் பற்றிய சிறு குறிப்பு.

தொன்று தொட்டு வரும் வழிபாட்டு முறைகளையோ, அல்லது பக்தர்களின் நம்பிக்கைகளையோ நாம் ஒரு நாளும் கேள்விக்கு உட்படுத்துவதில்லை! அது அவர்களின் நம்பிக்கை, அவர்களது வழக்கம். ஆனால் நாம் அறிந்த ,படித்த, ஆன்மிக நூல்களில் உள்ள விடயங்களை தொகுத்து இங்கு வழங்கி வருகிறோம். அந்த அடிப்படையில் ,இந்த சனி வழிபாடு செய்யும் தருணத்தில் இந்த விடயங்களையும் குறிப்பிடலாம் என்று கருதுகிறோம். அவரது வாகனம் ஆகிய காகம் கருப்பு நிறத்தை உடையது, தானியம் ஆகிய எள்ளு கருப்பு நிறத்தை உடையது […]

தீர்த்தம் பருகும் முறையும் அதன் முக்கியத்துவமும்!

சிவாச்சாரியார் தீர்த்தம் தரும்போது பலர் வாயினால் உறிஞ்சிக் குடிப்பதை பார்த்திருக்கிறோம். அப்படி எச்சில் பட வாயில் வைத்து தீர்த்தம் குடிக்கப் படாது. வாயில் படாமல் அண்ணாந்து தீர்த்தம் குடிக்க வேண்டும்! எந்த அளவு சிரத்தையோடு இறைவனின் திருநாமத்தைச் சொல்லி அந்த தீர்த்தத்தை உட்கொள்கிறோம் என்பதும் பிரதானம். அவனது நாமத்தினைச் சொல்லி, அவன் பாதம் சரணடைந்து சிறுதுளி தீர்த்தத்தை உட்கொண்டாலும் அது அமிர்தமாகி நம்மை காக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. ”அகால ம்ருத்யு ஹரணம் (1), ஸர்வ வ்யாதீ […]

திருமணத்தின் போது அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தால்!

கடந்த சில பதிவுகளில் மாங்கல்ய தாரணம் , மெட்டி அணிதல் என்று பார்த்திருக்கிறோம். இந்தப் பதிவில் ‘அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் என்ற நிகழ்வுகளை அறிவோம் நண்பர்களே! இந்து மத ,சைவ சமய விடயங்களை தெளிவாக அறிந்து கொள்ளாமல் விமர்சிப்பவர்கள் தற்குறிகளே! அம்மி மிதித்தல் என்கிற நிகழ்வினை ‘அச்மாரோஹணம்’ என்று குறிப்பிடுவார்கள். இந்து மதத்தில் திருமணத்தின்போது செய்யப்பட வேண்டிய முக்கியமான சடங்கு இது. அச்மன் என்றால் கல் என்று பொருள். அசைவற்ற ஒரு கல்லின் மீது மணப்பெண்ணை […]

விவாகத்தின் போது முக்கியமான சப்தபதி!!!

ஒரு விவாகம் நடைபெறும்போது மாங்கல்ய தாரணம் மட்டுமே பிரதானம் என்று எண்ணிவிட வேண்டாம்! மாங்கல்யதாரணம் முடிந்தவுடன் திருமணம் முற்றுப் பெறவில்லை !!! இந்து திருமண சாஸ்திரத்தின்படி மாங்கல்யதாரணத்துக்குப் பின் முக்கியமானதாக பாணிக்ரஹணமும், ஸப்தபதியுமே பிரதானமாகிறது! வேதோக்தமான திருமணத்தில் ,. தாலி கட்டிவிடுவதால் திருமணம் நடந்து முடிந்துவிட்டதாக சாஸ்திரம் மட்டுமல்ல, சட்டமும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாங்கல்யதாரணம் என்றழைக்கப்படும் தாலி கட்டுதல் முடிந்தவுடன் பெண்ணின் கரத்தினைப் பற்றி மாப்பிள்ளை மந்திரம் சொல்லி அந்தப்பெண்ணை தன் வாழ்நாள் முழுவதும் வைத்துக் காப்பாற்றுவதாக உறுதியளிப்பார். […]

தமிழர் திருமண முறைகள்!

தமிழர்களின் திருமண சடங்குகளும் அதன் விளக்கமும்… 1.#நாட்கால் நடல்: இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள். பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்) வெட்டி நடவேண்டும். மரத்தின் நுனியில், முனை முறியாத மஞ்சள், 12 மாவிலைகள், பூ மூன்றையும் இணைத்து கட்டவேண்டும். பின்பு நட வேண்டிய குழியில் வெள்ளி நாணயம் , பூ , நவதானியம் இவற்றை போட்டு பந்த கால் நட வேண்டும். சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைக்க வேண்டும். பந்தகால் நட்டவுடன் மரத்தின் […]

சஷ்டியப்த பூர்த்தி

‘ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி’ என்பதைத்தான் நாம் அறுபதாம் கல்யாணம் என்கிறோம். அறுபது வயது நிறைவு பெறும்போது செய்யப்படுகின்ற ஒரு சாந்தி பரிகார பூஜை இது. ,அறுபது என்பது ஒரு சுழற்சி. இந்த அடிப்படையில் அறுபது ஆண்டு முடிவடையும் தருவாயில் மனிதன் புனர்ஜென்மம் பெறுகிறான். எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மறுபிறவி என்றுகூட சொல்லலாம். அறுபது வயதுவரை தான், தனது குடும்பம் என்று வாழ்ந்து வந்த மனிதன், அதற்குப் பிறகு ஞான மார்க்கத்தை நாடி தனது […]

பிராமணருக்கு மனதார தானம் கொடுப்போம்.

குடும்ப அபிவிருத்தி, இறைவன் அருள், பெரியவர் ஆசி, வம்ச செழிப்பு, ஆயுள் கெட்டி , இப்படி பல விடயங்களை வேண்டி பிராமனருக்கு தானம் கொடுக்கப் படுகிறது. நல்லதாக கொடுங்கள், ”ஐயருக்குத்தானே” என்ற மனோபாவம் வேண்டாம். மனம் திருப்தியாக செய்யுங்கள்! இருபது தானங்கள்: – தத்தமது சக்திக்கேற்ப இருபது தானங்களைச் செய்ய வேண்டுமென சாஸ்திர நூலகளில் கூறப் பட்டுள்ளன.விதிகளில் சொல்லப்பட்டுள்ளது. ‘‘சிவபெருமான் மீது ஆழமான பக்தி கொண்ட அந்தணர்களை அழைத்து அவர்களை மணைப்பலகையில் அமர்த்த வேண்டும். அர்க்யம் தரவேண்டும். […]

தீப ஆராதனை வழிபாடு !

ஆலயங்களுக்கு செல்கிறோம், தீபாராதனைகளை வழிபடுகிறோம். அது கற்பூர தீபாராதனை என்றால் என்ன திரியில் ஏற்றப் பட்ட தீபாமாக இருந்தால் என்ன அர்த்தம் ஒன்றுதான்!!! இறைவன் சந்நதியில் கற்பூரம் ஏற்றி வழிபடுவது, தீபம் ஏற்றி வழிபடுவது எது சிறந்தது? என்று சிலர் சிந்திப்பதுண்டு. இறைவன் ஜோதி ஸ்வரூபனாக நிறைந்திருக்கிறான் என்பதே இந்த வழிபாட்டில் உள்ள கருத்து. இறைவனை அக்னி ஒளியில் தரிசிக்கும் போது மனம் தெளிவடைகிறது. இதனால்தான் கற்பூரம் அல்லது விளக்கு ஏற்றி வழிபடுகிறோம். கற்பூரம் என்பது திடப்பொருளாக […]

Scroll to top