தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
சீமந்தம் எதற்காக செய்கிறோம்???
ரிக் வேதத்தில் உள்ள சீமந்த கல்யாணம் பற்றிய குறிப்பு, அதன் பழைமைக்கும் பெருமைக்கும் எடுத்துக்காட்டு. ‘உலகில் தோன்றிய முதல் நூல் ரிக் வேதம்’ என்று வெளி நாட்டவர்களும் பாராட்டுவார்கள். ‘தேவ மாதா அதிதிக்கு சீமந்தம் செய்து அவளின் வம்சத்தை என்றும் சிரஞ்ஜீவியாக நிலை நிறுத்தினார் பிரஜாபதி. அதைப் போல் கர்ப்பமுற்ற என் மனைவிக்கு சீமந்தம் செய்து அவளின் பரம்பரையைச் செழிப்புடன் _ அதாவது பிள்ளை, பேரன், கொள்ளுப்பேரன் என்ற வரிசையில் அவள் குலத்தை சிரஞ்ஜீவி ஆக்குகிறேன்’ என்ற மந்திரம் ரிக் வேதத்தில் இருப்பதைக் கவனிக்க வேண்டும் ( ”’யேனாதிதே: ஸீமானம் நயதி ப்ரஜாபதிர் மஹதே ஸெளபகாய ).
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் உறுப்புகள் படிப்படியாக வளர்ச்சி அடைந்து அதன் இதயம், இன்ப துன்பங்களை அறியும் தன்மை யைப் பெற்றுவிடும். அவள் இதயத்துடன் குழந்தையின் இதயத்துக்குத் தொடர்பு இருக்கும்.
அவள் இரு இதயங்களைப் பெற்றவள்,”’ த்வி ஹ்ருதயாம்ச தௌர்ஹ்ரிதினீமாசக்ஷதே”” என்று ஆயுர்வேதம் கூறும். அவள் இதயத்தின் மூலம் குழந்தையின் இதயத்தைச் சுத்தப்படுத்த வேண் டும். அவளது எண்ணங்கள் குழந்தையின் மன தில் வேரூன்றிவிடும். ஆகையால், அவளின் மன நிறைவு, குழந்தையிடம் மன நிறைவை ஏற் படுத்தும் என்ற தகவலை ஆயுர்வேத அறிஞர் சுஸ்ருதரின் நூலில் காணலாம்.
பத்து மாதம் கருவறையில் இருந்து வெளிவரும் குழந்தை, தன் சிந்தனையில் தன்னை முழுமையாக்கிக் கொள்ளும் திறனை இந்த சீமந்த சம்ஸ்காரம் உண் டாக்கிவிடும். ஒருவனது உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவன் மனம் முக்கியக் காரணம். ”’மன ஏவ மனுஷ் யானாம் காரணம் பந்த மோக்ஷயோ:”’
நமது தொடர்புகள், புலன்களால் ஈர்க்கப்படும் விஷயங்கள் அத்தனையையும் மனம் வாங்கிக் கொண்டு இன்ப துன்பங்களாக மாற்றி நம்மை உணர வைக்கிறது. சுத்தமான மனம், உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொண்டு நம்மை மகிழ்விக்கும். கலக்கமுற்ற மனம், தவறாகப் புரிந்து கொண்டு தப்பாகச் செயல்பட வைத்துத் துன்பத்தை அனுபவிக்கச் செய்துவிடும். குழந்தையின் மனதை ஆரம்பத்திலேயே அதாவது முளையிலேயே செம்மையாக்கும் தகுதி சீமந்தத்துக்கு உண்டு.
நமது சித்தத்துக்கும் சிந்தனைக்கும் எட்டாத விஷயங்களை வேதத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கையோடு வேதக் கருத்துகளை வரவேற்பது தவிர, வேறு வழி இல்லை. நம் முன்னோர் நம்மையும் நம் சிந்தனைகளையும் அளந்து பார்த்தவர்கள். நம்மை வாழ்வாங்கு வாழ வைக்க சம்ஸ்காரத்தை வகுத்துத் தந்தது அவர்களது கருணை உள்ளம்.
குழந்தையின் மன இயல்பு தாய், தந்தையிடம் இருந்து வந்தது என்று கூற இயலாது. அவனது கர்ம வினை இயல்பாக மாறுகிறது. வாழ்க்கைக்கு இடையூ றான கர்ம வினையை அகற்ற வேண்டும். அதற்கு ஒத்துழைப்பது சீமந்தம். ஆயுள், கர்மம் (செயல்பாடு), பொருளாதாரம், அறிவு, மரணம் இவை ஐந்தும் பிறக்கும் போதே நிச்சயிக்கப்படுகிறது. ”’ஆயு: கர்ம வித்தம் ச”’ என்று ஜோதிடம் சுட்டிக் காட்டும். அதில் கர்ம வினையும் சேர்ந்து இருப்பதால் முன்ஜென்ம வினையை அகற்ற முந்திக் கொள்ள வேண்டும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
சீமந்தம் எதற்காக செய்கிறோம்???