இஷ்ட தெய்வ குல தெய்வ வழிபாடு!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
இஷ்ட தெய்வ குல தெய்வ வழிபாடு!!!
பலவிதமான வழிபாடுகளை இயற்றுவோம். இஷ்ட தெய்வ குல தெய்வங்களை வேண்டி வணங்கி நல்ல விடயங்களை ஆரம்பிப்போம். அந்த வழிபாடுகள் பற்றிய ஒரு குறிப்பை பார்ப்போம்!
இஷ்டம் இருந்தாலும் இஷ்டம் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு மகா சக்தியிடம் பக்தி செய்வது என்று ஒரு தத்துவத்தை மட்டும் காட்டாமல், நம் மனசுக்கு எப்படி இஷ்டமோ, அதற்கு அனுசரணையாகவே அந்த மகாசக்தியை ஒரு மூர்த்தியில் பாவித்து, வெறும் தத்துவத்தை ஜீவனுள்ள ஓர் அன்பு உருவகமாக பாவித்து, பக்தி செய்வதற்கு நம் மதம் அருளியுள்ள வழிபாடே இஷ்ட தெய்வ வழிபாடு’ என்று தெய்வத்தின் குரலாக மொழிந்திருக்கிறார் காஞ்சி பெரியவர்.
தெய்வ வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு என இரண்டு வழிபாட்டு முறைகள் உண்டு. குல தெய்வ வழிபாடு என்பது குடும்பத்தில் வழிவழியாகச் செய்யப்படும் வழிபாடு ஆகும். இஷ்ட தெய்வ வழிபாடு என்பது அவரவர் தங்கள் மனதுக்குப் பிடித்தமான தெய்வத்தை வழிபடுவது.
விநாயகர் சிலருக்கு இஷ்ட தெய்வம் என்றால், சிலருக்கு முருகன் இஷ்ட தெய்வமாக இருக்கலாம். சிலர் அம்பிகையை இஷ்ட தெய்வமாக வழிபடுவார்கள்; இன்னும் சிலர் சிவபெருமானை இஷ்ட தெய்வமாக வழிபடுவார்கள். இப்படியே ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி சிவன், கிருஷ்ணன், ஆஞ்சநேயர் என்று ஒவ்வொரு தெய்வத்தை வழிபடுவார்கள்.
முதலில் விநாயகர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு செய்த பிறகே இஷ்ட தெய்வ வழிபாடு செய்யவேண்டும் என்று நெறிமுறைகளை வகுத்துச் சென்றுள்ளனர் நம் முன்னோர்கள். அதன்படியே ஒவ்வொருவரும் இஷ்ட தெய்வத்தை உரிய வழிபாட்டு முறைகளுடன் வழிபடவேண்டும்.
இன்றைக்குப் பலரும் பல தெய்வங்களை இஷ்ட தெய்வங்களாக வழிபடுகின்றனர். ஆனால், ‘அகல உழுவதை விட ஆழ உழுவதே சிறந்தது’ என்பதுபோல், பல தெய்வங்களை இஷ்ட தெய்வங்களாக வழிபடுவதைவிடவும், ஒரு தெய்வத்தை மட்டுமே உறுதியான பக்தியுடன் ஒருமித்த மனத்துடன் வழிபடுவது, சிறந்த பலன்களைத் தரும்.
ஒரு தெய்வத்தை இஷ்ட தெய்வமாகக் கொண்டு வழிபட்டு அன்பர்கள் பலன் பெறவேண்டும் என்பதற்காக, இந்த இணைப்பில் விநாயகர் தொடங்கி சில தெய்வங்களை வழிபடும் முறைகள், மந்திரங்கள், வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் போன்றவற்றைத் தொகுத்துத் தந்திருக்கிறோம்.
அன்பர்கள் அனைவரும் இஷ்ட தெய்வத்தை முறைப்படி வழிபட்டு, கஷ்டங்கள் நீங்கி சுகமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
May be an image of 5 people, temple and text
இஷ்ட தெய்வ குல தெய்வ வழிபாடு!!!
Scroll to top