பாராட்டுகிறோம்! வாழ்த்துகிறோம்!!
26/05/2024 ஞாயிற்றுக்கிழமை மாலை கனடா Toronto மாநகரில் நடைபெற்ற கனடா உதயன் பத்திரிகையின் 18 ஆவது மாபெரும் சர்வதேச விருது வழங்கும் விழாவில், இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனரும் (Modern Hindu Culture) , மூத்த சிவாச்சார்யரும் , சைவத்தமிழ் உலகத்தின் பெருமகனாரும் , சிறந்த ஆன்மீக, தமிழ் சமய சமூக சேவையாளருமான சிவாகம கலாநிதி , சிவாகம வித்வான், அதிகௌரவ சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யர் அவர்களின் சேவைகளைப் பாராட்டி , சிவாச்சார்யர் அவர்கள் ” தலைமைத்துவ விருது ” – LEADERSHIP AWARD வழங்கி உதயன் பத்திரிகை நிறுவனத்தாரால் கௌரவிக்கப்பட்டார் !
கனடா உதயன் பத்திரிகையின் 18 ஆவது விருது வழங்கும் விழாவின் போது விருது பெற்ற இந்தியா, மலேசியா , France போன்ற நாடுகளைச் சேர்ந்த கல்விமான்களுடன் சிரேஷ்ட குரு அவர்களையும் தெரிவு செய்தமைக்கு கனடா உதயன் பத்திரிகை நிறுவனத்தாருக்கும் நன்றி கூறுகிறோம்.
கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சட்டசபை உறுப்பினர்கள், நகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் , பெரியோர்கள், கல்விமான்கள், அறிஞர்கள் நிறைந்திருந்த சபையில் அதிவந்தனத்துக்குரிய டாக்டர் சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யர் அவர்களை நாமும் பாராட்டி , வாழ்த்தி மகிழ்வடைகிறோம்.
சுன்னாகம் கதிரமலை எல்லாம் வல்ல ஸ்ரீ சுவர்ணாம்பிகா தேவி சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப்பெருமானின் கிருபா கடாட்சத்துடன் சிவாச்சார்யர் அவர்கள் தனது பாரியார் ஸ்ரீமதி காஞ்சனா அம்மாவுடன் இணைந்து ,தேக திட ஆரோக்கியமாக மகிழ்வுடன் தொடர்ந்து தமது ஆன்மீக சமய சமூகப் பணிகளை இடையறாது தொடர வேண்டி வணங்கி வாழ்த்துகிறோம்.
Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம், சுன்னாகம்.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சாரியார்.( நிறுவனத் தலைவர்)
காட்சிப்படங்கள் பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
+3
See insights and ads
Boost post
<img class="x16dsc37" role="presentation" src="data:;base64, ” width=”18″ height=”18″ />
All reactions:
28
சிவாகம கலாநிதி நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யார் அவர்களுக்கு வாழ்த்து!