தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஆலயங்களும் அங்கே உள்ள மண்டபங்களும்!!!
தலைமுறை தலைமுறையாகப் பல பக்தர்கள் தவமும், செபமும், தியானமும், பூசையும், பிரார்த்தனையுஞ் செய்த இடங்களே திருக்கோயில்கள். பக்த கோடிகள் விழுந்து புரண்டு வழிபட்ட தலங்களுக்கு ஒரு தனிச் சக்தி உண்டு. அவற்றில் இறைவனை எளிதிற் காணலாம்.
அவர்களுக்குப் பயன்படுவதற்காகவே ஆலயங்கள் அமைக்கப்பெற்றன. உடலில் உள்ள தத்துவங்களை விளக்குவதற்கு ஆலயங்கள் வந்துள்ளன. ஆகமங்கள் விதித்துள்ளபடியே ஆலயங்களை அமைக்க வேண்டும். இமயங்கள், நியமங்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்தே இவைகள் அமைக்கப்பட்டன. பொதுமக்கள் வந்து தங்கி உணவு உண்டு, சுப நிகழ்ச்சிகள் செய்வதற்காக ஆலயங்கள் கட்டப்பட்டன. இவை மனோதத்துவ முறைப்படி பல நன்மைகள் செய்து வருகின்றன.
இங்கு சிவனுடைய வாயில் காப்பாளனாகிய நந்தியை நிர்மாணிப்பதன் மூலம் எண்ணங்களை அடக்கி மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை உணர்த்தப்படுகிறது. தீய குணங்கள் நீங்க வேண்டும் என்பதை (பலியிட வேண்டும்) பலி பீடம் குறிக்கின்றது. புருவ மத்தியில் ஆன்ம ஒளி ஏற்படும் என்பதைக் குறிக்க அங்கு நெற்றிக்கண்
அமைக்கப்பட்டுள்ளது. மூளையிலுள்ள நரம்புகள் அனைத்தும் மணியாகவும், விளக்காகவும் உருவகப்படுத்தப்படுகிறது.
கர்ப்பகிரகம் – முகம்
அர்த்த மண்டபம் – கழுத்து
மகா மண்டபம் – மார்பு
மணி மண்டபம் – வயிறு
உள் சுற்று – தோள்கள்
வெளிச் சுற்று – கைகள்
கருவறைத் தூண்கள் – கண்கள்
தூண்கள் – எலும்புகள்
கர்ப்பக்கிரகம் என்பது பிரதான மூர்த்தியை வைத்து வணங்கும் இடமாகும். இதற்கு கருவறை (மூலஸ்தானம்) என்று பெயர்.
பத்திதத்துவமும் தனு புவன போகங்களும் மாயையில் ஒடுங்க, மாயை இறைவன் திருவடியில் ஒடுங்கும். கருவறை இருட்டாக இருக்கக் காரணம் ஏன்? ஆதி காலம் தொட்டு உயிர் அறியாமையை நீக்கிச் சிவப்பேற்றைத் அளிப்பதற்காக , இறைவனை மட்டுமே காணவேண்டும் , வேறு எதுவும் கண்ணில் தெரியக் கூடாது என்று கருவறையை நம்முன்னோர்கள் இருட்டறை ஆக்கித் திருவருள் புரியும் திருவுருவங்களைக் கருவறையினுள் வைத்தனர்.
கோயில் மண்டபம் என்றால் பலருக்கும் அர்த்த மண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம் இவை மட்டுமே நினைவுக்கு வரும். இவை மட்டுமல்ல, பழைமைமிக்க நமது திருக்கோயில்களில் இன்னும் பல வகை மண்டபங்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. வியக்க வைக்கும் மண்டபங்களின் வகைப்பட்டியல் இங்கே உங்களுக்காக!
1. அர்த்த மண்டபம்
2. மகா மண்டபம்,
3. நிருத்த மண்டபம்,
4. பதினாறு கால் மண்டபம்,
5. நூற்று (அ) ஆயிரங்கால் மண்டபம்,
6. ஸ்நபன மண்டபம்,
7. கேய மண்டபம்,
8. வாத்திய மண்டபம்,
9. முக மண்டபம்,
10. சோபான மண்டபம்,
11. கோபுரத் துவார சாலா மண்டபம்,
12. ஆஸ்தான மண்டபம்,
13. யாக மண்டபம்,
14. புஷ்ப மண்டபம்,
15. பூசை மண்டபம்,
16. விஜய மண்டபம்,
17. சுற்று மண்டபம்,
18. உத்யான மண்டபம்,
19. வல்லி மண்டபம்,
20. சூர்ண மண்டபம்,
21. நறுமணக் கலவை மண்டபம்,
22. நீராழி மண்டபம்,
23. கந்த மண்டபம்,
24. ஆபரண மண்டபம்,
25. மஞ்சன மண்டபம்,
26. அலங்கார மண்டபம்,
27. வசந்த மண்டபம்,
28. உபசாரமண்டபம்,
29. முரசு மண்டபம்,
30. தமிழ்வேதப் பயிற்சி மண்டபம்,
31. தமிழ் ஆகம மண்டபம்,
32. புராண விரிவுரை மண்டபம்,
33. தீட்சை மண்டபம்,
34. வீணா மண்டபம்,
35. கொடியேற்ற மண்டபம்,
36. தேர் மண்டபம்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
ஆலயங்களும் அங்கே உள்ள மண்டபங்களும்!!!