தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஆன்மீக நூல்களில் இருந்தும் ஆன்மீகப் பெரியவர்கள் அருளிய விடயங்களில் இருந்தும் தொகுத்து சைவ மக்கள் பலரும் நன்மை அடைய வேண்டும் என்று அவற்றை தொகுத்து Modern Hindu Culture Face Book இல் பதிவிட்டு உடனடியாக இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவன இணையதளத்தில் www.modernhinduculture.com இணைக்கப் பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் இரு தினங்களுக்கு முன்பு அமாவாசை விரத வழிபாடுகளின் முக்கியத்துவம் பற்றி எழுதி இருந்தோம். அதன் அடிப்படையில் சிராத்தம் பற்றிய தொகுப்பு ஒன்றை இங்கே தருகிறோம்
முன்னோர் மறைந்த மாதமும் திதியும் வரும் நாளில், சிராத்தம் செய்வதைத் தான் `திவஸம்’ என்றும் `திதி கொடுத்தல்’ என்றும் குறிப்பிடுகிறோம்.வருடம் தோறும் சிராத்தம் செய்ய வேண்டும். ஒருவரின் பிறந்தநாளை, அவரது நட்சத்திரத்தின் அடிப் படையில் கொண்டாடுவதும், இறுதி நாளை அன்றைக்கு இருக்கும் திதியின் அடிப் படையில் வருடம்தோறும் அனுஷ்டிப்பதும் வழக்கம்.
முன்னோருக்குக் குறிப் பிட்ட திதிநாள் அன்றுதான் சிராத்தம் செய்யவேண்டும். கர்மா செய்பவருக்கு, ஏதேனும் தவிர்க்க முடியாத காரணத்தால் அதைச் செய்யமுடியாமல் போனால் மட்டுமே, வேறு நாள் பார்க்கவேண்டும். மற்றபடி குறிப்பிட்ட திதியன்று திவஸம் செய்வதே சிறந்தது.
இறந்தவருக்கு நாம் இங்கு செய்யும் கிரியைகள், அவர் எங்கு எந்த உருவில் இருந்தாலும் அவரைச் சென்றடையும். நாம் நம் கைப்பேசியில் அனுப்பும் குறுஞ்செய்தி, வேறு ஒருவரின் கைப்பேசிக்குச் செல்வதைப் போல், நமது சநாதன தர்மத்தில் செய்யக்கூடிய ஒவ்வொரு கிரியையும் அதற்குரிய பலனைத் தரவே செய்யும்.
இவை அனைத்தும் காலம் காலமாக நம் முன்னோர்களால் கடைப் பிடிக்கப்பட்டு வருபவையாகும். எனவே, ஒருவர் மறைந்த திதியில்தான் அவருக்குச் சிராத்தம் செய்ய வேண்டும்.
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணைய தள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
சிராத்தம் எப்போது செய்ய வேண்டும்?