தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
அமாவாசை விரத வழிபாட்டின் முக்கியத்துவத்தை அறிவோம்!
காலம் காலமாய் நம் வாழ்வு செழித்திருக்க தெய்வப் பலமும் முன்னோர் ஆசியும் அவசியம் தேவை.
இந்தப் பேறுகளைப் பெற, அவசியமான சில வழிபாடு களைச் செய்யச் சொல்கின்றன நம் ஞான நூல்கள்.
அவற்றில் ஒன்றுதான் அமாவாசை.
வருடத்தில் மூன்று அமாவாசை தினங்கள் முக்கியத் துவம் பெறும். அவற்றில் ஒன்று உத்தராயனப் புண்ணிய காலத் தொடக்கமான தைமாதத்தில் வரும் அமாவாசை. மகத்துவம் நிறைந்த இந்த நாளில் செய்ய வேண்டிய முன்னோர் வழிபாட் டின் அவசியங்கள் குறித்து ஞான நூல்கள் விளக்குகின்றன.
ஓர் ஆண்டில் 96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது வேதம். குறைந்தபட்சம் ஆண்டுக்கு மூன்று முறையாவது நம் முன்னோரை உரிய காலத்தில் வழிபட வேண்டியது அவசியம். அவ்வாறு செய்வது நமக்கு நன்மை பயக்கும்.
புனிதமான இந்தத் தர்ப்பணங் களைச் செய்யாமல் இருந்தால், குடும்பத் தகராறு, ஆரோக்கியக் குறைபாடு, எதிர்மறை எண்ணங்கள், விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்பட்டு நிம்மதி யைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம்.
மேலும் நாதி தோஷம், பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் தொடரும் சிக்கல்களால் பலவித துன்பங்களும் நேரலாம் என்கின்றன சாஸ்திரங்கள்.
இவ்வித பாதிப்புகள் நம்மை அணுகாமல் இருக்க, தை அமா வாசை முதலான தினங்களில் உரிய முன்னோர் வழிபாட்டை அவசியம் செய்யவேண்டும்.
சூரியன் பித்ருகாரகன், சந்திரன் மாத்ருகாரகன். எனவே சூரியனும், சந்திரனும் இணையும் அமாவாசை புண்ணிய தினத்தில் தாய், தந்தை வழி பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து அவர்களை மகிழ்விப்பது புண்ணிய காரியமாகும். மூன்று தலைமுறையாக வாழ்ந்த நம் முன்னோருக்குச் செய்கிற வழிபாடு, நிச்சயம் நம்மையும் நம் சந்ததியையும் குறையின்றி வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.
மாதம்தோறும் அமாவாசை தினங்களில் தர்ப்பண வழிபாடுகளைச் செய்ய இயலாமல் போனவர்கள், தை – ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை தினத்திலாவது முன்னோரை வழிபட்டு வரம் பெற வேண்டும்.
பித்ருக்களுக்கு வைக்கப்பட்ட பிண்டங் களை நீர்நிலைகளில் சேர்க்கலாம். பித்ரு காரியங்களைச் செய்தபிறகு, தான தருமங்கள் செய்வதால் கூடுதல் பலன் உண்டு.
பிதுர் தர்மங்களைச் செய்யச்சொல்லும் நம் ஞானநூல்கள், நம் முன்னோர்களை அவர்கள் வாழும் காலத்தில் மிக மரியாதையு டனும் வணக்கத்துடனும் நடத்தும்படி அறிவுறுத்துகின்றன.
அமரத்துவம் பெற்ற முன்னோர்களுக்குத் தர்ப்பண வழிபாடுகளைச் செய்யச் சொல்லி அறிவுறுத்துகின்றன.இத னால் கிடைக்கும் புண்ணியம் மிக மேலானது என்கிறது கருடபுராணம்.
சிராத்தம், தர்ப்பணம், பித்ரு காரியம், படையல் ஆகியவை அனைத்தும், நம் முன் னோர்களைச் சென்றடைந்து, அவர்களின் ஆத்மாக்களைக் குளிர்விக்கும். மகிழ்ந்து அவர்கள் தரும் ஆசி, நம்மை மட்டுமல்ல நம் சந்ததியையும் வாழ்வாங்கு வாழவைக்கும்.
எனவே வரும் தை அமாவாசைத் திருநாளில் புண்ணிய நதி தீரங்களிலோ, அல்லது உங்கள் வீடுகளிலோ, அவரவர் வழக்கப்படி முன்னோர்களுக்கு உரிய வழிபாடுகளைச் செய்து, ஏழேழ் தலைமுறைக்கும் புண்ணிய பலன்களைப் பெற்று வாழுங்கள்.
லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து;
சர்வே ஜனா சுகினோ பவந்து!
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
அமாவாசை விரத வழிபாட்டின் முக்கியத்துவத்தை அறிவோம்!