நல்ல வார்த்தைகளை பேசுவோம். சக மனிதர்களை மதிப்போம்.
நம் வீட்டில் மகாலக்ஷ்மி வாசம் செய்யவேண்டும் என்றால், துர்வார்த்தைகளை, அமங்கலச் சொற்களை ஒருபோதும் சொல்லக்கூடாது என்பதை உணர்ந்து, தெளிவோம். நல்ல நல்ல வார்த்தைகளையே பயன்படுத்துவோம்.
வார்த்தைகளுக்கு மிக மிக முக்கியத்துவம் உண்டு. மந்திரத்துக்கு மகிமை உண்டு என்கிறோம். அந்த மந்திரச் சொற்கள் அப்படி மகிமையாக்குகின்றன. மந்திரச் சொற்களை உச்சரிக்க உச்சரிக்க, நல்ல அதிர்வலைகள் நம் வீட்டில் குடிகொள்ளும்.
இறை திருநாமங்களைச் சொல்லுவதாலும் நல்ல அதிர்வுகளை உணரலாம். நம்மை துர்தேவதைகள் நெருங்கவிடாமல் இந்த மந்திரச் சொற்களும் இறை திருநாமங்களும் நம்மை காபந்து செய்யும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஒரு வார்த்தை கொல்லும்; ஒரு வார்த்தை வெல்லும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
நம் வீடுகளில் மகாலக்ஷ்மி வாசம் செய்யவேண்டும் என்றுதான் நாம் எல்லோருமே எதிர்பார்க்கிறோம். காலையும் மாலையும் அதனால்தான் விளக்கேற்றுகிறோம். பெண்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் முக்கியமான நாட்களில் தலைக்குக் குளித்து, பூஜைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபடுவதும் என நடைபெற்றுக் கொண்டிருப்பதும் அதனால்தான்!
நம் வழிபாடுகளில் முக்கிய அங்கம் வகிப்பது தேவி வழிபாடுதான். அதிலும் உக்கிர தெய்வமாகத் திகழும் துர்கையையும் சாந்த சொரூபினியாகத் திகழும் மகாலக்ஷ்மியையும் வழிபடுகிறோம்.
நம் வீட்டில் மகாலக்ஷ்மி வாசம் செய்யவேண்டும் என்றால், துர்வார்த்தைகளை, அமங்கலச் சொற்களை ஒருபோதும் சொல்லக்கூடாது என்பதை உணர்ந்து, தெளிவோம். நல்ல நல்ல வார்த்தைகளையே பயன்படுத்துவோம்.
மகாலக்ஷ்மி சந்தோஷமாவாள். மங்காத செல்வங்கள் அனைத்தையும் தந்தருள்வாள்!
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture.Org.
www.modernhinduculture.com
நல்ல வார்த்தைகளை பேசுவோம். சக மனிதர்களை மதிப்போம்.