நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இறைவனுக்கு தினமும் நன்றி சொல்வோம்!

நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இறைவனுக்கு தினமும் நன்றி சொல்வோம்!
நம் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவான உணவு, உடை, இருப்பிடம் இவற்றை நமக்களித்த, நமக்குக் கொஞ்சமும் அறிமுகமில்லாத பலருக்கு, அவற்றைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சமயமும் நாம் நன்றி சொல்ல வேண்டியவர்களாகிறோம். நம் தேவைகளை நாம் பணம் கொடுத்துதான் வாங்குகிறோம். ஆனாலும் பணம் கொடுத்தாலும் கிடைக்கும்படியாக அவற்றைத் தயாரித்து நமக்களித்திருக்கும் அந்த முகம் தெரியாத அன்பர்களுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும்.
உணவு உண்ணுமுன் ஓரிரு விநாடிகள் பிரார்த்திப்பதும், புத்தாடை அணியுமுன் அவற்றை பூஜையறையில் வைத்து ஓரிரு விநாடிகள் வேண்டிக்கொள்வதும், புது வாகனம் வாங்கும்போது அதற்குப் பூ அலங்கரித்து சில விநாடிகள் உளமாற நன்றி சொல்வதும், அதற்குப் பிறகு ஒவ்வொரு முறையும் வாகனத்தை இயக்குமுன்பும் ஓரிரு விநாடிகள் மனதார வணங்குவதும், புதுவீடு புகுமுன் பூஜை செய்வதன் மூலமாக நன்றி தெரிவிப்பதும் – இவையெல்லாம் அந்தந்த வசதிக்கு மூலமாகவும், தொடர்ந்த காரணமாக இருந்தவர்களுக்கு நாம் நன்றி செலுத்தும் நல்வழக்கம்தான்.
இவர்களோடு இன்னும் ஒருவருக்கும் நாம் நன்றி சொல்கிறோம் – இறைவன். நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்களுக்கு அவரவருக்கான பணித் திறமையையும், வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்த இறைவனுக்கும் கூடவே நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் அவனருளாலே அவர்கள் மேற்கொண்ட பணிகளின் பலன்களை நாம் அனுபவிக்கிறோமே அதற்காகத்தான்!
அந்த இறைவனுக்கு நன்றி செலுத்தும்போது நாம் வாழ உறுதுணையாக இருக்கும் அனைவர்க்கும் நன்றி செலுத்துகிறோம்!!!
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,( E Magazine editor)
இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture . Organization.
www.modernhinduculture.com
நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இறைவனுக்கு தினமும் நன்றி சொல்வோம்!
Scroll to top