தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
என்னதான் சிலர் எப்படி என்றாலும் வழிபாடுகளையும்,சடங்குகளையம் ,சம்பிரதாயங்களையும் தம் மனம் போன போக்கில் விமர்சனம் செய்தாலும் ,ஆன்மிகம் என்பது வளர்ந்து கொண்டுதான் இருக்கும்.
ஆன்மிகம் ஆன்மிகம்தான். ஆன்மிகம் என்பது இந்த உலகில் இருக்கும் வரை சம்பிரதாயமும் சடங்கும் என்றென்றும் நிலைத்திருக்கும். நமது தேசத்தின் ஆணிவேரே அன்பும் ஆன்மிகமும்தான். அன்பு இருக்கும் இடத்தில் ஆன்மிகம் என்பது தானாக இடம்பிடித்துவிடும். அதனால்தான் அன்பே சிவம் என்றார்கள். ஆங்கிலத்தில் love is god என்கிறார்கள். எங்கெல்லாம் உண்மையான அன்பு இருக்கிறதோ அங்கெல்லாம் இறைவன் இருக்கிறான் என்பதை உலகத்தோர் எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
நம்மிடையே அன்பு உணர்வு அதிகம் இருப்பதால் அங்கே ஆன்மிகமும் நிலைப்பட்டு நிற்கிறது. ஆன்மிகம் நிலைப்பட்டு நிற்பதால் சம்பிரதாயமும், சடங்குகளும் மாறாமல் இடம்பிடிக்கின்றன. நாகரிகம் மாறினாலும் இந்த அடிப்படை உணர்வு நம்மை விட்டு என்றுமே அகலாது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
இக்கட்டான கால கட்டங்களில் ஆலய வழிபாடுகள் செய்யலாம் என்பதை அறிந்தவுடன் மக்களின் மன மகிழ்ச்சியை கண்கூடாக பார்க்கக் கூடியதாக உள்ளதே நாம் மேலே குறிப்பிட்டமைக்கு சான்று!!!
ஆன்மிகம் – வளர்ச்சி