தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
சூரன் போர் பல ஆலயங்களில் மிகுந்த ஆக்ரோஷமாகவும் அதேசமயம் பக்தி பரவசமாகவும் நடந்து முடிந்ததை பார்த்திருப்பீர்கள். நாகாசுர வதம் என்றாலும் சரி ,மகிஷா சுர வதம் என்றாலும் சரி, நண்பர்களே, தொடர்ந்து கீழே படியுங்கள் ,:
அரை குறையாக தெரிந்து வைத்திருப்பவர்கள் சிலர் , ”இது எப்படி ,இது கொலை மாதிரி இல்லையா” என்று தங்கள் அறிவுக்கு எட்டிய வரையில் , பிரதானமாக வேறு மதங்களை சார்ந்தவர்கள் பேசியதாக பத்திரிகைகளிலும் பார்த்தோம்.
இது பற்றி ஷண்முக சிவாச்சாரியார் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம் :-
நாம் ஏதேனும் தொற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், நல்ல மருத்துவரிடம் சென்று அந்தத் தொற்றினைப் போக்கிக்கொள்வது முக்கியமானது. இல்லையெனில், அந்தத் தொற்று நம் உடலை அழித்துவிடும். அதேபோன்று அசுரர்கள் என்பவர்கள் தங்களின் தீய செயல்களால் மனித வாழ்வுக்கு தீங்கு விளைவிப்பவர்களாக செயல்பட்டவர்கள்.
அவர்களை அழிப்பது அத்தியாவசியமாகிறது. அவர்களில் சிலரை அழிப்பதால் நல்லோர் பலருக்கு நன்மை உண்டாகிறது. தீமைகள் அழிக்கப்படுவதில் தவறு இல்லை.
அப்படித்தான் தெய்வ சக்தி நம்முடைய நன்மையைக் கருதி தீய சக்திகளை அழிப்பது கொலையாகாது. அதர்மத்தை அழித்தல் போற்றப் படவேண்டியது. சண்டிகாதேவியை ஜய ஜய என்று தேவர்கள் போற்றினார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.
ராணுவ வீரரானவர் எப்படி பயங்கரவாதி களைக் கொன்று நாட்டைக் காப்பாற்றுகிறாரோ, அப்படியே தெய்வ அவதாரங்களின் திருக் கதைகளையும் அவர்கள் நிகழ்த்தும் அசுர வதத்தையும் நாம் பார்க்கவேண்டும்.