நவராத்திரி.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:-

நவராத்திரி:

இல்வாழ்வில் இன்னல் தோன்றாமல் இருக்க பயம் அகல வேண்டும். உலகையே பயத்தால் நடுங்க வைத்தவர்களையும் அழித்தவள் அவள். பயம் அகன்றவர்களுக்கு சிந்தனை வளம்பெற அறிவூட்டுபவள் அவள். வாழ்க்கையின் அடித் தளத்தையே தகர்க்கும் ஏழ்மை, மக்களை பற்றாமல் பார்த்துக்கொள்பவள் அவள். ‘பயம், ஏழ்மை ஆகியவற்றை அகற்றி, அறிவொளி அளிக்க எப்போதும் கருணை உள்ளத்துடன் விழித்துக் கொண்டிருக்கும் தாய் துர்கை’ என்று மார்க்கண்டேய புராணம் கூறுகிறது (துர்கே ஸ்ம்ரு தாஹரஸி…).

பயம் போக்கும் துர்கை வடிவத்துக்கு மூன்று நாள், ஏழ்மையை அகற்றும் லட்சுமி வடிவத்துக்கு மூன்று நாள், அறிவொளி தரும் சரஸ்வதி வடிவத்துக்கு மூன்று நாள்… இப்படி ஒன்பது நாட்கள் அம்பாளை வழிபடுவது சிறப்பு! மூன்று தடவை சொன்னால் முற்றுப்பெற்றதாக எண்ணலாம். ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி’ என்று வேதம் மும்முறை சொல்லும். மூன்று நாட்களில் பயம் அகன்றது. அடுத்த மூன்று நாட்களில் ஏழ்மை அகன்றது. கடைசி மூன்று நாட்களில் அறிவொளி நிலைத்தது. ஆகையால், அம்பாளுக்கு ஒன்பது நாள் பணிவிடை செய்வது விசேஷம்!

நவராத்திரி.
Scroll to top