அறிந்து கொள்வோம் நண்பர்களே!;
கடவுள் என்பது நீங்களும் தான், நானும் தான். Ego- வை விடுவதுதான் ஆன்மீகம். நான் ஏதோ பெரிய இடத்தில் இருக்கிற ஆள். நீ என்கிட்ட பிரசாதம் வாங்கினால் தான் உருப்படுவாய் என்று சொல்வது அல்ல ஆன்மீகம். இந்த உலகத்தில் எல்லாரிடத்திலும் ஆண்டவன் இருக்கிறான். ””அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி”’ என்பதைப் புரிந்து கொள்வது தான் ஆன்மீகம். so, யார் ஒருவன் தன்னிடம் இருக்கிற அந்த இறையாற்றலை உணர்ந்து கொள்கிறானோ – இப்போ நாம் சுவிட்ச் போட்டால் தானே விளக்கு எரியும். அதனால் நாம் தான் அந்த பிரயத் தனத்தில் ஈடுபட வேண்டும். ஒருத்தர் டாக்டர் ஆக வேண்டும் என்றால் மெடிக்கல் காலேஜ் போக வேண்டும். ஒரு இறை தூதுவன் ஆக வேண்டும் என்றால் அதற்காக சில பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த மாதிரி பயிற்சிகளை நாம் மேற்கொள்ளுகிறபோது நம்மிடத்தில் உள்ள அந்த இறைத்தன்மை மேலோங்குகிறது. அதை வைத்து நாம் நாலு பேருக்கு நல்லது செய்ய முடிகிறது. ஒரு டாக்டருக்குப் படித்தவுடனே நாலு பேருக்கு ஆபரேஷன் செய்யலாம்,என்பது போல.