அறிந்து கொள்வோம் நண்பர்களே:;
அறுசுவையில் எல்லோராலும் விரும்பப்படுவது இனிப்பு என்கிறது சாஸ்திரம் (ஸர்வப்ராணி மனோகரம்). உப்பு என்பது சுவை ஏற்றுவதற்குப் பயன்படுவது. இதை, சுவையின் முதல்வன் என்று சாஸ்திரம் கூறும் (ரஸானாம் அக்ரஜம்…). மாறுபட்ட கோணத்தில் இரண்டுக்குமே சிறப்பு உண்டு. ஒன்றுக்கு துயரம், மற்றொன்றுக்கு மகிழ்ச்சி என்று வரையறுப்பது நமது தனிப்பட்ட எண்ணமே! அவை இரண்டும் துயரத்தையோ மகிழ்ச்சியையோ குறிப்பதில்லை. இனிப்போ, உப்போ… இரண்டுமே அளவுக்கு அதிகமாக உடம்பில் தென்பட்டால், உடல் உபாதையைத் தோற்றுவிக்கும் என்கிறது ஆயுர்வேதம்.எப்படி இருந்தாலும், விருந்தோம்பலில் இலையில் பரிமாறும்போது இனிப்பு வைப்பது சிறப்பு. உண்பவர் முதலில் இனிப்பைச் சந்திக்கும்போது, ஈடுபாட்டுடன் அந்த விருந்து உபசாரத்தை ஏற்பார். ஆகையால், எல்லோருக்கும் பிரியமான இனிப்பைக் கையாளுவதே சிறப்பு.
-சஞ்சிகை ஒன்றிலிருந்து: