நண்பர்களே, அறிந்து கொள்வோம்:
ஏன் தூபம் இடுகிறோம்? அதன் சிறப்பு என்ன? தெரிந்து கொள்வோம்.:;
தூபத்துக்குச் சாம்பிராணியும் பயன்படுத் தலாம் குங்குலியமும் பயன்படுத்தலாம்.
‘அக்னி தேவனுக்கு மூன்று அண்ணன்மார் இருந்தார்கள். அவர்கள், வேள்வியில் இடப்படும் உணவை அந்தந்த தேவர்களுக்கு அளிக்கும் பொறுப்பை ஏற்று சேவை செய்தார்கள். காலப்போக்கில், உயிர்வாழத் தேவைப்படும் உணவுத் தட்டுப்பாட்டால் உயிரிழந்தார்கள். பிறகு அவர்கள் ‘பூதத்ரு’ எனும் மரமாக உருவெடுத்தார்கள். அந்த மரத்திலிருந்து கிடைக்கும் கொழுப்புப் பொருள் குங்கிலியம். இறந்துபோன சகோதரர்களின் மாமிசம் குங்குலிய வடிவில் தென்பட்டது. அது நெருப்போடு இணைந் ததும் உருகி புகையை வெளியிட்டது; அக்னி பகவான், தன்னுடைய சகோதரர் களின் சேர்க்கையில் மகிழ்வதாக எடுத்துக் கொள்ளப்பட்டது’ என்ற தகவல் வேதத்தில் உண்டு.
ஆகையால் தூபத்துக்கு குங்குலியம்,சாம்பிராணி பயன் படுத்துவது சரிதான். கடவுள் வழிபாட்டில், 16 உபசாரங்களில் ‘தூப’ உபசாரமும் ஒன்று.