அறிந்து கொள்வோம் நண்பர்களே;;
பண்டைய காலத்தில் அரசர்கள், வணிகர்கள் மற்றும் மறை ஓதுபவர்கள் ஆகியோர் பரம்பரை பரம்பரையாகக் குடுமி வைத்துக்கொண்டிருந்தனர். குடுமியை உடலின் ஓர் உறுப்பாக சொல்லும் வேதம். அதை அவர்கள் பின்பற்றினார்கள்.எனவே, உடைக்கும்போது, தேங்காய், குடுமியுடன் இருக்க வேண்டும். உடைத்தப் பிறகு அதை அகற்றலாம். உடைப்பதற்கு முன் தேங்காயில் உயிரோட்டம் உண்டு. அது பிரிந்த பிறகு, குடுமியை அகற்ற வேண்டும்.
தென்னையில் இருந்து கிடைக்கும் முக்கண் கொண்ட தேங்காய், முக்கண்ணனான ஈசனுக்குச் சமம். ‘உனது குடுமி எனது துயரத்தைத் துடைக்கட்டும்!’ என்ற வேண்டுதலை முன்வைத்து, தேங்காயைப் போற்றும் செய்யுள் ஒன்றுண்டு.
நாம் வழிபடுவதற்கு வசதியாக உருவமற்ற தெய்வத்துக்கு உருவம் அமைப்போம். கும்பம் வைத்து, அதில் இறைவனை குடியிருத்துவோம். குடம், இறைவனின் திருமேனி. குடத்தின் மேல் வைக்கப்படும் தேங்காய், இறைவனின் சிரம்; அது, சிகையுடன் அதாவது குடுமியுடன் திகழ வேண்டும். எனவே, குடுமியுடன் கூடிய தேங்காயைக் கும்பத்தில் வைப்பார்கள். நாருடன்கூடிய மட்டைத் தேங்காய் பல நாள்கள் கெடாமல் இருக்கும். தேங்காய் நார் அதற்குப் பாதுகாப்பு. ‘மூளையைப் பாதுகாக்க குடுமி இருக்க வேண்டும்!’ என்பது ஆயுர்வேதத்தின் அறிவுரை.
ஆனால், நாம் குடுமியை என்றோ இழந்து விட்டோம். தேங்காய்க்காவது இருந்துவிட்டுப் போகட்டும். உடைக்கும் வரை பொறுமையாக இருங்கள். உடைத்தப் பிறகு எடுத்துவிடலாம்.
நன்றி–சேஷாத்திரிநாத சாஸ்திரிகள்