அறிந்து கொள்வோம் நண்பர்களே:,
ஊண்-உறக்கம் இல்லாத இறைவனும் பொழுது புலர்ந்ததும் நீராடுகிறார். ஈசனின் தலையிலேயே கங்கை உண்டு. ஆனாலும், கருவறையைத் திறந்ததும் அவருக்கு நீராடல் உண்டு. அவர் நித்ய சுத்தன். அவரும் காலைப் பொழுதில் நீராட வேண்டும் என்று ஆகமம் சொல்லும்.உண்டு உறங்குபவர்கள் நாம். காலையில் நம் உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களில் இருந்தும் கழிவுகள் வெளியேறும். அப்போது நீராடினால், உடல் சுத்தமாகும். நித்ய சுத்தனை, சுத்தமாக இருந்து வணங்க வேண்டும் அல்லவா? தவிர, கோயிலுக்குச் செல்வதற்காக மட்டுமல்ல… நமது சுகாதாரத்தை எண்ணியும் நீராட வேண்டும்.வெறுமனே வாயை மட்டும் கொப்பளித்து விட்டு, காபி அருந்தக் கூடாது. நீராடிய பிறகே எதையும் உட்கொள்ள வேண்டும். தவறான நடைமுறைகளைப் பின்பற்றிப் பழக்கப் பட்டவர்களுக்குச் சிரமமாக இருக்கும். எனினும், மூக்கிலும், காதிலும், ரோமக் கால்களிலும் கழிவுகளை வைத்துக்கொண்டு எப்படி காபி அருந்துவது? சிந்தித்துப் பாருங்கள்!அன்றாடம் எழுந்தவுடன் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று நீராடல். கோயிலுக்குப் போனாலும் போகாவிட்டாலும் கட்டாயம் நீராட வேண்டும். கோயிலுக்குப் போகும் முன் நீராடிச் செல்லுங்கள். உடல் சுத்தமாகும்; கோயிலில் அவனைத் தரிசிப்பதால் உள்ளமும் சுத்தமாகும்.
–நன்றி : சேஷாத்திரி நாத சாஸ்திரிகள்.