தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
இன்று பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற ஓர் முக்கிய தினம்.இன்றைய தினத்தில் தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டு பலன் பெறுவோம்.
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும் நாளில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. சந்திரன் உத்திர நட்சத்திரத்தில் இருப்பதால் இவ்விழாவிற்கு இப்பெயர் ஏற்பட்டது. இந்நாளை கல்யாண விரதம் என்றும் அழைப்பார்கள். இந்நாளில் குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
* முருகன் – தெய்வயானை திருமணம்
* ஸ்ரீராமர் – சீதை திருமணம்
* சுந்தரேஸ்வரர் – மீனாட்சி திருமணம்
* ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணம்
* ரதிக்காக மன்மதனை சிவபெருமான் எழுப்பித் தந்த நாள்
* அர்ஜுனன் அவதார நாள்
* சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் பிறந்தநாள்
தெய்வத் திருமணங்கள்.