தெரிந்து கொள்வோம் நண்பர்களே.
இறை வழிபாட்டின் மூலமே நாம் எம் வாழ்க்கையில் ஓர் உன்னத நிலையை எட்ட முடியும்.
ஒரு கனிக்காக விநாயகரும், முருகனும் சிவன் வைத்த போட்டியில் கலந்து கொண்டதாக
பழநி தலபுராணம் கூறுகிறது. இதில் யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி என்பது கதை
சுவைக்காக எழுதப்பட்டது மட்டுமே.
இதற்குள் பெரும் ஆன்மிக மர்மம் புதைந்து கிடக்கிறது. எந்தப் பொருளையும் முயன்று பெற்றால் தான் அதன் அருமையை மக்கள் உணர முடியும் என்பது சிவன் நமக்குச் சொன்ன பாடம். அதுமட்டுமல்ல, அம்மையப்பனாகிய ஆண்டவன் நம் கண்ணுக்குத் தெரியாத எங்கோ ஒரு இடத்தில், அண்டங்களுக்கு அப்பால் இருப்பதாகக் கருதப்பட்டாலும் உலகம் யாவும் அவனுக்குள் அடக்கம் என்பதை இறைவனைச் சுற்றி வருவதன் மூலம் கணபதி காட்டுகிறார்.
பார்க்கும் இடம்தோறும் இறைவன் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதை முருகப்பெருமான் உலகை வலம் வந்தது மூலம் நமக்கு எடுத்துரைக்கிறார்.
* சூரனை அழித்து தேவர்களைக் காத்தவனே! தேவசேனையின் அதிபதியே! தெய்வானை மண
வாளனே! அருணகிரிநாதருக்கு அருள்புரிந்தவனே! ஆறுமுகனே! பன்னிரு கைகளால் வாரி வழங்கும் வள்ளல் பெருமானே! திருமாலின் மருமகனே! ஆனைமுகனின் தம்பியே! குழந்தை
தெய்வமே! எங்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வ வளத்தையும்
தந்தருள்வாயாக.