தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
வீட்டில் பூஜை அறை, சாமி அறை,அலுமாரியில்படம் வைத்து , என்று நீங்கள் வழிபாடு செய்பவர்கள் என்று இருந்தால் பிரம்மஸ்ரீ சேஷாத்திரி நாத சாஸ்திரிகள் என்ன சொல்கிறார் என்று பாப்போம்:—பூஜை முடிந்ததும், அலமாரியை மூடிவிடலாம். கதவுகள் இல்லையெனில் திரையிட்டு மூடலாம். இறைவன் குடியிருக்கும் பூஜையறை அல்லது பூஜா அலமாரியின் கதவைத் திறந்தபடி வைத்திருந்து, குறுக்கும் நெடுக்குமாக நடப்பதும், பிற வேலைகளில் கவனம் செலுத்துவதும், சாப்பிடுவதும், அரட்டை அடிப்பதுமான செயல்கள் இறைவனை அவமதிப்ப தாகும். ஆகவே, கதவை மூடிவைப்பதில் தவறேதும் இல்லை.
நம் வீட்டில் ஓர் இடத்தை அல்லது அறையை இறைவனுக்கு ஒதுக்கியிருப்பதாக நினைக்காதீர்கள். இறைவன் குடியிருக்கும் வீட்டில் நாம் வாழ்கிறோம் என நினையுங்கள். இதனால் பணிவு, பரிவு, பக்தி ஆகியவை தழைக்கும்.