தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
இம்மாதம் தொடக்கத்தில் உலக ஆஸ்துமா தினம் கொண்டாடப் பட்டது .அது சம்பந்தமான மருத்துவக் குறிப்பு ஒன்றை பாப்போம்.
ஆஸ்துமா பற்றிய விழிப்பு உணர்வே பலரிடம் இல்லை’’ எனக் கூறும் குழந்தைகள் நலம் மற்றும் ஆஸ்துமா அலர்ஜி சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன், ஆஸ்துமாவை வெல்லும் வழிமுறைகளை விரிவாக விளக்குகிறார்.பசி ஏற்படும்போது சாப்பிடாமல் இருந்துவிட்டால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகி, அது செரிமானக் குழாயில் மேல்நோக்கிச் செல்லும்போது ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux) என்கிற, ஆஸ்துமாவை உண்டாக்கும் காரணியாக மாறும். மூக்கில் ஏற்படும் அலர்ஜியால் நுரையீரலின் செயல்திறன் குறைந்து தொடர் சளி, நெஞ்சுச் சளி, இருமல், மூச்சுவிடுவதில் சிரமம், மூக்கினால் சுவாசிக்க முடியாமல் வாயால் மூச்சுவிடும் நிலை, மூச்சு விடும்போது விசில் சத்தம், சிரித்தாலோ, பேசினாலோ இருமல் வருவது, கொஞ்ச நேரம் நடந்தால்கூட அதிகமாக மூச்சு வாங்குவது… இவையெல்லாம்் ஆஸ்துமாவின் முதல்நிலை அறிகுறிகள். குழந்தைகளுக்கு அடிக்கடி அலர்ஜி, ஜலதோஷம் போன்ற பிரச்னைகள் வந்தால், அதற்கான காரணம் அறியாமல், `அது சாதாரண பிரச்னைதான்’ என அலட்சியமாக இருப்பதால்தான், பிற்காலத்தில் ஆஸ்துமா வினால் பெரிய அளவில் பாதிப்புகள் உருவாகின்றன.
ஆஸ்துமா பற்றிய விழிப்பு உணர்வே பலரிடம் இல்லை