தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
மருத்துவக் குறிப்பு:-
நண்பர்களே,வீட்டில் இருந்த படி பல நோய்களை தீர்க்கும் குறிப்புகள் அவ்வப் போது இப்பகுதியில் பதிவு செய்துள்ளோம். அந்த வகையில் இன்று இக்குறிப்பு:
இன்றைக்கு மனிதகுலத்தை வாட்டும் நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்று. இந்த நோய் வந்தவர்கள் வாழைப்பூவைச் சுத்தம் செய்து, சிறிது சிறிதாக நறுக்கி, அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால், சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
சிலருக்கு மலம் வெளியேறும்போது கூடவே ரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை, மருத்துவ உலகம் ‘ரத்த மூலம்’ என்ற பெயர் வைத்து அழைக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால், ரத்த மூலம் விரைவில் குணமாகும்.