தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
யார் யார் விரதம் இருக்கலாம்?
உடம்பை வருத்தி விரதம் இருக்க வேண்டுமா??
உடலும் உள்ளமும் வலுவாக இருப்பவர்கள் நாள் முழுக்க எதுவும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். தண்ணீர் அருந்துவது விரதத்தைக் கெடுக்காது. சில விரதங்களில் இரவில் மட்டும் உணவருந்தலாம். உடல், உள்ளம் ஆகியவை பலவீனமாக இருந்தால், மதியம் உணவையும் இரவில் பலகாரத்தையும் எடுத்துக் கொள்ளலாம். நாம், அரிசி உணவை மட்டுமே உண்பவரானால், அதைத் தவிர்த்து, கோதுமையைப் பயன்படுத்தலாம்.
அதாவது அரிசியை முற்றிலுமாக விலக்கி, மற்ற பண்டங்களைப் பயன்படுத்தலாம். வீம்புக்காக உணவை முற்றிலுமாகத் துறப்பது தவறு.
உடல் நலனைக் கருத்தில்கொண்டு விரதத்தில் மாற்றம் செய்ய, தர்ம சாஸ்திரம் அனுமதிக்கிறது.
யார் யார் விரதம் இருக்கலாம்?