நண்பர்களே, கந்தஷஷ்டி விரதகாலம் ஆரம்பிக்க உள்ள இவ்வேளையில் அனைவர்க்கும் முருகப் பெருமானின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டுகிறோம்.
””உருவாய், அருவாய், உளதாய், இலதாய்,
மருவாய், மலராய், மணியாய், ஒளியாய்,
கருவாய், உயிராய், கதியாய், விதியாய்,
குருவாய், வருவாய், அருள்வாய் குகனே!””
முருகா,
உருவமாகவும், உருவம் இல்லாத அருவமாகவும், இருப்பவனாகவும், இல்லாதவனாகவும், மொட்டாகவும், மலராகவும், மணியாகவும், ஒளியாகவும், கருவாகவும், அது வளர்ந்து உருவாகின்ற உயிராகவும், எங்களுக்குக் கதியாகவும் விதியாகவும் இருக்கிறவனே, எங்களுடைய குருவாகவும் வந்து அருள் செய்.
கந்தஷஷ்டி விரதகாலம்