தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
அபிஷேகம்:-
மண் அல்லது மரம் ஆகியவற்றால் உருவான இறை உருவங்களுக்கு அபிஷேகம் இருக்காது. கல்லால் ஆன விக்கிரகத் திருமேனிகளுக்கு அபிஷேகம் உண்டு. ஆனால், வேறு ஏதோ காரணங்களால் அபிஷேகம் விடுபட்டு, தைலக் காப்புடன் நின்றுபோவதை, சிறப்புப் பெயருடன் நடைமுறைப்படுத்துவதில் ஆகமத்துக்கு உடன்பாடில்லை. ஜபம், ஹோமம், அர்ச்சனை, அபிஷேகம் ஆகியவற்றை சாஸ்திரம் ஏற்கிறது (ஜபஹோமார்ச்சனாபிஷேகவிதிம்…).
அபிஷேகத்தில் தண்ணீருக்குச் சிறப்புண்டு. தைலக்காப்புக்குப் பிறகு தண்ணீர் அபிஷேகம் உண்டு. பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு, இளநீர், சந்தனம் ஆகிய அபிஷேகங்களில், தண்ணீர் அபிஷேகமும் சேர்ந்து வரும்.
அதே நேரம்… வழிவழியாக பக்தர்களால் கூறப்படும் கதை, கோயில் வரலாறு ஆகியவற்றையொட்டி, சம்பிரதாயமாக ஏற்றுச் செயல்படுவதாக இருந்தால், தைலக்காப்புடன் நிறுத்திக்கொள்ளலாம்.
நன்றி- ஆன்மிக இதழ் ஒன்றில் இருந்து.