தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஆவணி மாதத்தில் வரும் மூல நட்சத்திரம் இறைவன் வழிபாட்டிற்கு மிக உகந்ததாக உள்ளது.
வந்தி பாட்டிக்காக பிட்டுக்கு மண் சுமந்த லீலையும், பாண்டிய மன்னனுக்கு ஒரு பாடம் கற்பிக்க என்றும், மாணிக்கவாசகரின் பக்தியை உலகு உணரும் பொருட்டும், நரியை பரியாக்கி மன்னனிடம் அளித்ததும் ஆவணி மூலத்தன்றுதான் என்று கருதப்படுகிறது.
செம்மனைச்செல்வி(வந்தி) என்ற, பிட்டு விற்கும் ஏழை, மூதாட்டி, வைகை ஆற்றின் கரையின் ஒரு சிறு பகுதியைப் பலப்படுத்தும் கடப்பாட்டுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். முதுமை காரணமாக, அவரால், தனது பகுதி வேலையை செய்யமுடியவில்லை. ஏழை மூதாட்டியார் மற்ரவர் உதவியை நாடினார். கூலியாள் வடிவில் வந்த, சிவபெருமான் உதிர்த்த பிட்டை ஊதியமாக ஏற்று, மூதாட்டியின் வேலையை செய்ய உடன்பட்டார். ஊதியத்தை உண்டபின், தனது வேலையைச் செய்ய என , மூதாட்டியிடம் விடைபெற்று அற்ரங்கரைக்குச் சென்றார்.
கூலியாள் தனது வேலையைச் செவ்வனே செய்யாது, அற்ரங் கரையில் படுத்துறங்கினார். இதை அவதானித்த மேற்பார்வை அதிகாரிகள், கூலியாளை எழுப்பி அவர் வேலையைச் திருந்தச் செய்யப் பணித்தனர். அது பலனளிக்காத்து போகவே கூலியாளுக்கு தண்டனை வழங்கிநர். அத் தண்டனை ஒரு சவுக்கடியாக அமைந்தது. சிவனுக்குக் கிடைத்த சவுக்கடியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன, பாண்டிய மன்னனும் உணர்ந்தான், தனது பிழையையும் உணர்ந்தனன் என சமய நூற்கள் கூறுகின்றன.
இதன் காரணமாக இத்தினம் பிட்டுக்கு மண் சுமந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது.