தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஏன் யாகங்கள், ஹோமங்கள் செய்கிறோம்?
‘கோயிலிலும் மற்ற இடங்களிலும், வீடுகளிலும் விசேட தினங்களிலும் மங்கல விஷயங்கள் நடைபெறும் போதும், ஹோமங்கள் செய்கிறோம், யாகம் வளர்க்கிறார்கள்; பூஜை செய்கிறார்கள். இதற்கு உண்டான சக்தி என்ன?, இவற்றைச் செய்வதால் நிகழும் பலாபலன்கள் என்ன?
”அக்னி என்பது தூய்மையானது. மகா சக்தி கொண்டது. தீயவை என்று எவையெல்லாம் இருக்கிறதோ, அவற்றையெல்லாம் அழிக்கும் சக்தி அக்னிக்கு உண்டு.
அதனால்தான் யாகம் வளர்த்து பூஜிக்கிறோம். ஹோமம் செய்கிறோம்! பிறந்ததில் இருந்து இறக்கும் வரையிலான காலகட்டங்களில், முக்கியமான நிகழ்வுகளுக்கு இப்படி ஹோமம் வளர்க்கச் சொல்லி, வேதம் பரிந்துரைப்பது மனிதர்களுக்கு பலம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
அடுத்து, அக்னியை கவனித்திருக்கிறீர்களா? சிறியதோ பெரியதோ… எதுவாக இருந்தாலும், அக்னி எப்போதும் மேல்நோக்கியே எரிந்துகொண்டிருக்கும். நம் சிந்தனையும் செயலும், எண்ணமும் வாழ்க்கையும் இப்படி மேல்நோக்கியே இருக்க வேண்டும். நல்லதாக அமைய வேண்டும்!
தவிர, அக்னி என்பது ஞானத்தின் குறியீடு. அதனால்தான் ‘ஞானாக்னி’ என்று வர்ணிக்கிறார் பகவான் கிருஷ்ணர். ஒருவருக்கு ஞானம் இருந்துவிட்டால், இங்கே உள்ள சொந்த பந்தங்களிடமும், உற்றார் உறவுகளிடமும் அன்பாக நடந்து கொள்வார். நல்லதை செய்வார்! நல்லதா எண்ணுவார்! எல்லோருக்கும் நன்மைகள் கிடைக்கும்
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
ஏன் யாகங்கள், ஹோமங்கள் செய்கிறோம்?