மாவிலை தோரணத்தின் மகிமையும் அவசியமும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
மாவிலை தோரணத்தின் மகிமையும் அவசியமும்!!!
ஆலய விழாக்களிலும் வீட்டு விசேடங்களிலும் மாவிலை தோரணங்களின் அவசியங்களைப் பார்ப்போம்!
மாவிலையில் லட்சுமியும், வேப்பிலையில் ஆதிசக்தியும் குடியிருக்கிறார்கள் என்பது ஐதீகம். மாவிலை நேர்மறையான எண்ணத்தை உண்டாக்க வல்லது. காற்றிலிருக்கும் கார்பன் -டை-ஆக்சைடையும், வேப்பிலை காற்றிலிருக்கும் நஞ்சையும் உறிஞ்சும் சக்தி கொண்டது.
இவையெல்லாம் ஆன்மீக குறிப்புகள் எனில், அறிவியல் ரீதியாக மாவிலையை வீட்டின் வாயிலில் கட்டுவது ஏன் ? என்ற கேள்விக்கு, மாவிலை கார்பன்டை ஆக்சைட் வாயுவை உள்ளிழுத்து கொண்டு ஆக்ஸிஜனை வெளியேற்றும் தன்மை கொண்டது. பலர் கூடும் இடத்தில் ,இதன் மூலமாக அந்த சூழல் மிக புத்துணர்வு மிக்கதாகவும், ஆரோக்கியமானதாகவும் அமையும்.
இந்த இரு இலைகளுமே எப்போதுமே, எந்த காலக்கட்டத்திலும், அழுகிபோவதில்லை. இலை துளிர்த்து, முதிர்ந்து, காய்ந்து, சருகாகி மக்கித்தான் போகுமே தவிர பாதியிலேயே அழுகிப்போகாது.
கலசங்களில் மாவிலை வைக்க படுகின்றது. சில சமயம் கலசத்தில் வைக்கப்படும் நீரில் வெட்டிவேர், ஏலக்காய், கிராம்பு, சந்தன எண்ணெய், மஞ்சள் பொடி போன்றவை சேர்க்க படும். மாவிலைக்கு நீரில் உள்ள கிருமிகளை நாசம் செய்யும் சக்தி உண்டு. அது கலச நீரை தூய்மை படுத்தி அதிக அளவு ஆக்சிஜன் வெளியிட்டு கொண்டிருக்கும்.
தோரணத்தில் மாவிலை மட்டுமே இடம் பெறும் என்று சொல்ல முடியாது. தென்னங்கீற்று கொண்டும் தோரணம் கட்டுவார்கள். அதன் இடையிடையே மாவிலையைச் சேர்ப்பார்கள். வசந்த காலத்தில் மாம்பூ பூத்துக்குலுங்கும். அதன் இளந்தளிர், பூக்கள், அதிலிருந்து பெருகும் மது ஆகியவற்றை பறவைகள் உண்டு மகிழும். குறிப்பாக, குயிலினம் அதை உட்கொண்டு தனது குரல்வளத்தைப் பெருக்கிக்கொள்ளும் என்று கவிகள் கூறுவார்கள்.
அதன் நறுமணம், சுற்றுச்சூழலை ரம்மியமாக் கும். இறைவனைக் குடியிருத்தும் கும்பத்தில் மாவிலைக் கொத்து இருக்க வேண்டும். அதற்கு, மரங்களின் அரசன் என்ற பெயர் உண்டு (விருஷ ராஜஸமுத் பூதசாகாயா:…). வேள்வியின்போது, நெய்யை அக்னியில் சேர்க்க மாவிலையைப் பயன்படுத்துவார்கள். மந்திரத்தில், புனிதமான நீரை மாவிலையால் தெளிப்பதுண்டு. கும்பாபிஷேகத்தின்போதும், பந்தல்கால் நாட்டும் விழாவிலும்… கோபுரக் கலசம் மற்றும் பந்தல்காலில் மாவிலைக் கொத்தைக் கட்டுவார்கள். திருமணத்தில் நுகத்தடியிலும் மாவிலை இருக்கும். பெண்களின் சௌளத்தில் மாவிலைக் கொத்தைப் பயன்படுத்துவார்கள்.
வாடிப்போன மாவிலைகள் பயிரினங்களுக்கு உரமாக மாறுவதுண்டு. வனஸ்பதியில் சிறந்தது மா. முக்கனிகளில் ஒன்று மாம்பழம். ஜீவராசி களுக்கு இருப்பிடம் அளித்து உதவும்; வெப்பத் தைத் தாங்கி நமக்கு நிழல் தந்து உதவும்; இயற்கை வளமான மாவிலை, மனித வாழ்க்கைக்குப் பயன்படும் பொருளாகத் திகழ்கிறது.
இத்தனையும் தெரிந்த பிறகும், பிளாஸ்டிக் மாவிலைத் தோரணம் கட்டும் பண்பாடு வளர்வதுதான் அதிசயமாக இருக்கிறது.
அதுபோலவே, மானிடப் பிறவியும் தங்கள் வாழ்க்கையினை முழுதாக வாழ்ந்து முடிக்க வேண்டும். வாழும் காலத்திலும், தன் காலத்திற்கு பிறகும் மற்றவர்களுக்கு உபயோகப்படவேண்டும் என்று உணர்வதற்காகதான் வாசலில் மாவிலை, வேப்பிலை தோரணம் கட்டுகிறார்கள்.
விழாக்காலங்களிலும் விசேட நாட்களிலும் பல அர்த்தங்கள் நிறைந்த மாவிலை தோரணங்களை கட்டி பலனைப் பெறுவோம்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மிக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
மாவிலை தோரணத்தின் மகிமையும் அவசியமும்!!!
Scroll to top