அகவை எழுபதில் கால்பதிக்கும் முத்தமிழ்க் குருமணி டாக்டர் சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக்குருக்கள் தம்பதிகளை பிரம்மஸ்ரீ ஜெயராமசர்மா தம்பதிகள் மனமுவந்து வாழ்த்தி வழங்கிய வாழ்த்துப்பா

நன்றி: மரபுப்பாமணி, முத்தமிழ் வித்தகர், ப்ரம்மஸ்ரீ மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, B.A Hons (Tamil), Dip. In .Ed, Dip. In .Soc, Dip.In Com, SLEAS, M.Phil.
அகவை எழுபதில் கால்பதிக்கும் முத்தமிழ்க் குருமணி
டாக்டர் சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக்குருக்கள் தம்பதிகளை
பிரம்மஸ்ரீ ஜெயராமசர்மா தம்பதிகள்
மனமுவந்து வாழ்த்தி வழங்கிய
வாழ்த்துப்பா
ஆகமும் அறிந்தவரே அன்னைத்தமிழ் ஆளுமையே
அரங்கேறி ஆன்மீகம் அறவுரைகள் அளிப்பவரே
ஆலயக் கிரியைகளை அகமாரச் செய்பவரே
ஆண்டுபல வாழ்கவென்று அகமார வாழ்த்துகிறோம்
ஈழத்தில் குடமுழுக்கு எத்தனையோ செய்தவரே
ஈழம்விட்டு பலநாட்டில் குடமுழுக்கும் செய்தவரே
ஆழமுடன் திருமுறையை அரவணைக்கும் ஆசானே
அன்னைத் தமிழாலே ஆசிகூறி வாழ்த்துகிறோம்
இலக்கியமும் அறிந்தவரே இங்கிதமும் தெரிந்தவரே
இன்முகத் தோடெல்லாமே இஷ்டமாய் செய்பவரே
கற்றவரை மதிப்பவரே காருண்யம் காப்பவரே
இத்தரையில் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறோம்
மாண்புநிறை மங்கை வாழ்க்கைத் துணையானார்
மணிமணியாய் மக்கள் வரமாக வந்தமைந்தார்
பேரர்களும் வந்திட்டார் பெருஞ்சுற்றம் நிறைந்திட்டார்
பூதலித்தில் என்னாளும் பொலிவுறவே வாழ்த்துகிறோம்
ஆளுமையே வாழ்க ஆசானே வாழ்க
ஆனந்தம் பொங்கவே அகமகிழ வாழ்க
நலமோடு வாழ்க வளமோடு வாழ்க
நிலமீது பல்லாண்டு நிறைவோடு வாழ்க
பிரம்மஸ்ரீ ஜெயராமசர்மா மெல்பேண்
ஸ்ரீமதி சாந்தி தம்பதிகள் அவுஸ்திரேலியா .
தகவல்:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , நிறுவன இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
May be an image of 5 people, temple and text that says 'R AI CAMERA Shot on realme C11 ShotonrealmeCT2021 2021'
அகவை எழுபதில் கால்பதிக்கும் முத்தமிழ்க் குருமணி டாக்டர் சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக்குருக்கள் தம்பதிகளை பிரம்மஸ்ரீ ஜெயராமசர்மா தம்பதிகள் மனமுவந்து வாழ்த்தி வழங்கிய வாழ்த்துப்பா
Scroll to top