இறைவழிபாட்டின் அத்தியாவசியம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
இறைவழிபாட்டின் அத்தியாவசியம்!!!
ஒருவர் வாழ்க்கையில் முன்னேறுவதற்குக் கடவுள் நம்பிக்கை கண்டிப்பாகத் தேவை. நம்மைப் படைத்தும் காத்தும் வழிநடத்தும் கடவுளையே நாம் நம்பவில்லை என்றால், நாம் மற்றவர்களிடம் எப்படி உண்மையாக இருக்கமுடியும்?
உண்மையான பக்தியுடன் கடவுளை வழிபடுபவர்கள் தவறு செய்யமாட்டார்கள். சிலருக்கு பக்தி இருந்தும் மனிதாபிமானம் இல்லையென்றால், அவர்களின் பக்தி முழுமையடையவில்லை என்றே பொருள். எடுத்த உடனேயே அவர்களுக்கு பக்குவம் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது. பல பிறவிகள் எடுத்த பிறகே நம்மால் நம்முடைய உண்மையான தன்மையை அறிய முடியும்.
கடவுள் நம்பிக்கை இருந்தால், நம்மை கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் ஏற்பட்டு, நாம் தவறு செய்யக்கூடாது என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும்.
நாம் மனம் தளர்ச்சியுற்று இருக்கும்போது உறவினர்களோ நண்பர்களே தர முடியாத மன உறுதியை, தைரியத்தை கடவுள் நம்பிக்கை நமக்கு அளிக்கும். நம் ரிஷிகளும் முன்னோர்களும் கடவுள் வழிபாடு செய்துதான் பயன் அடைந்தனர். எனவே, நாம் வேரிலிருந்து விலகக்கூடாது.
அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒருவர் கடவுளிடம் பக்தி செலுத்தினால், அவர் கடவுளைக் குறை கூறமாட்டார். ‘எல்லாம் அவன் அருள்’; ‘நன்மையும் தீதும் பிறர் தர வாரா’ என்ற வாக்கியங்கள் வெறும் வார்த்தைகள் அல்ல. அவை அனுபவ மொழிகள். எனவே, கடவுள் பக்தியை எந்தக் காலத்திலும் விட்டுவிடாமல், சரணாகதி மனப்பான்மையுடன் பக்தி செலுத்துவது அவசியம்.
தீய வழியில் செல்வோரும், தீய எண்ணங்கள் உள்ளவர்களும் தெய்வ நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். எனினும் அனைத்து ஜீவராசிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை நாம் அனுதினமும் வேண்டிக்கொண்டால் உலகம் முழுவதும் நன்மை அடையும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
May be an image of 5 people, temple and text that says 'R AI CAMERA Shot on realme C11 ShotonrealmeCT2021 2021'
இறைவழிபாட்டின் அத்தியாவசியம்!!!
Scroll to top