நன்றி: மரபுப்பாமணி, முத்தமிழ் வித்தகர், ப்ரம்மஸ்ரீ மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, B.A Hons (Tamil), Dip. In .Ed, Dip. In .Soc, Dip.In Com, SLEAS, M.Phil.
உ
அமுத விழாக் கொண்டாடும்
ஆளுமை டாக்டர் சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்தக் குருக்கள் மாமா
ஸ்ரீமதி காஞ்சனா மாமி தம்பதியினரை மனமுவந்து வாழ்த்தி
பிரம்மஸ்ரீ ஜெயராமசர்மா ஸ்ரீமதி சாந்தி தம்பதியினர் வழங்கும்
வாழ்த்துப்பா
ஆண்டெண்பதில் அடிவைக்கும் அன்புநிறை மாமாவை
நீண்டநாள் வாழ்கவென நெஞ்சமதால் வாழ்த்துகிறோம்
மாண்புடைய மாமியை மனமதிலே வைத்திருக்கும்
மாமாவைப் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறோம்
அமுதான தமிழோடு ஆங்கிலமும் வடமொழியும்
ஆகமும் வைத்தியமும் அனைத்துமே கற்றவரே
சிற்பமும் தெரிந்தவரே சித்திரமும் அறிந்தவரே
இத்தரையில் இன்பமுடன் வாழ்கவென வாழ்த்துகிறோம்
அன்னைத் தமிழினை ஆன்மீகத் தோடிணைத்து
அகமிருத்தும் கருத்துக்களை அள்ளியே தருபவரே
அறிவியலை உள்வாங்கி அர்த்தத்தை உரைப்பவரே
ஆண்டுபல வாழ்கவென்று அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்
ஆகமக் கிரியைகளின் அர்த்தத்தை அகமிருத்தி
ஆத்மார்த்த நிலையிலினிலே ஆற்றுகின்ற மாமாவே
விளங்காத விடயங்களை விளக்கிவிடும் ஆளுமையே
வளமோடும் நலமோடும் வாழ்கவென வாழ்த்துகிறோம்
வாண்மையுடை மக்களை வரமாகப் பெற்றவரே
வாரிசாய் பேரர்களை உரமாகக் கொண்டவரே
கற்றறிந்த தம்பியொடு கனிவான சுற்றத்தைப்
பெற்றிட்ட மாமாவைவை நற்றமிழால் வாழ்த்துகிறோம்
நாடகமும் தெரிந்தவர் நல்லிசையும் வழங்குவார்
நாகரிகம் அறிந்தவர் நல்லிதயம் மிக்கவர்
உதவிக் கரங்கொடுக்க ஓடோடி வந்திடுவார்
உலகிடையே உவப்போடு வாழ்கவென வாழ்த்துகிறோம்
நூல்கள்பல தந்துள்ளார் நுண்மாண் அறிவுடையார்
கால்பதித்த துறையெல்லாம் கண்டிடுவார் வெற்றிகளை
தாழ்வுற்று நிற்போரைத் தாங்கியே நின்றிடுவார்
தரணியிலே பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறோம்
ஓய்வறியா உழைத்திடுவார் உளமகிழ உரைத்திடுவார்
உலகெங்கும் நட்பினை உருவாக்கி இணைந்திடுவார்
மறவாது வாழ்த்திடுவார் பாராட்டி மகிழ்ந்திடுவார்
நிலமீது பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறோம்
மங்களமாய் வாழ்க மனமகிழ வாழ்க
பொங்கியே இன்பம் பொலிந்திடவே வாழ்க
தங்கமாமி காஞ்சனா தனையணைத்து நீங்கள்
தரணிபோற்றப் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறோம்
பிரம்மஸ்ரீ ஜெயராமசர்மா மெல்பேண்
ஸ்ரீமதி சாந்தி தம்பதியர் அவுஸ்திரேலியா.
பிரம்மஸ்ரீ ஜெயராமசர்மா மெல்பேண்
ஸ்ரீமதி சாந்தி தம்பதிகள் அவுஸ்திரேலியா .
தகவல்:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , நிறுவன இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
அமுத விழாக் கொண்டாடும் ஆளுமை டாக்டர் சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்தக் குருக்கள் மாமா ஸ்ரீமதி காஞ்சனா மாமி தம்பதியினரை மனமுவந்து வாழ்த்தி பிரம்மஸ்ரீ ஜெயராமசர்மா ஸ்ரீமதி சாந்தி தம்பதியினர் வழங்கும் வாழ்த்துப்பா