திருமாங்கல்யத்தின் (தாலி) மகிமை!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
திருமாங்கல்யத்தின் (தாலி) மகிமை!!!
தாலியை ஒரு நூலில் என்றாலும் கட்டி குங்குமம் இட்டு கண்ணில் ஒற்றி வழிபடும் தம்பதியினரை இன்றும் பார்க்கிறோம்! சரி, சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்!
தங்கம் ஆதிசிருஷ்டியான ஹிரண்யகர்ப்ப பகவானின் கர்ப்பத்திலிருந்து வந்தது. அக்னியின் அம்சம் தங்கம், அதற்கு தேஜஸ் என்று பெர்யர். இந்திய தர்க்கவியல் என்ன சொல்கிறது??? , தங்கத்தை ‘தேஜஸ்’ என்கிறது. மனைவியின் தேஜஸ் நிரந்தரமாக இருக்க கழுத்தில் எப்போதும் திருமாங்கல்யம் அணிய வேண்டும் என்று சொல்கிறது!
கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், ‘நமக்கு இருக்கக் கூடிய அழியாத சொத்து தங்கம்’ என்கிறது. வேதத்தில், ‘நீ தினமும் தங்கத்தை அணிந்துகொள்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமையின் அடையாளம் தங்கம்.
‘’தாலபத்ரம்’’ என்பதிலிருந்து பிறந்ததுதான் தாலி என்ற சொல். பழங்காலத்தில் பெண்கள் தங்கள் காதுத் துளையிலும், கழுத்திலும் சுருள் பனை யோலையைப் போட்டுக் கொள்வார்கள். இதற்கு ‘தாலம்’ என்று பெயர். அதுதான் பிற்காலத்தில் தாலி என்று வழங்கலாயிற்று!!! நாகரீகம் வளர வளர பனை ஓலையில் தாலி போட்டுக்கொண்டு இருக்க முடியாது என்பதனால் தேஜஸ் என்ற தங்கத்தில் தாலி உருவாகியது!!!
கழுத்திலும் ஏதாவது ஒன்று எப்போதும் இருக்க வேண்டும். அந்த காரணத்தால் தம்பதியின் நெருக்கம் ஒரு நாளும் குறையக் கூடாது என்பதற்காக அதை நினைவுறுத்தும்படியாக கழுத்தில் எப்போதும் தாலி இருக்க வேண்டும்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, நிறுவன ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
May be an image of coconut
திருமாங்கல்யத்தின் (தாலி) மகிமை!!!
Scroll to top