அறிந்து கொள்வோம் நண்பர்களே:
சிவலிங்கங்கள்ப் பற்றிய ரஷ்ய விஞ்ஞானி டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார். அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான்.
உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.
ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான்.
உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார்.