இன்று கோபுரங்கள் இல்லாத ஆலயங்கள் குறைவு! ஈழத்தில் கடந்த 10 வருடங்களில் கோபுரம் இல்லாத பல ஆலயங்கள் இன்று அழகிய கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தருவதைப் பார்த்திருப்பீர்கள்!!!

கோபுரக் கலசம் மட்டும் அல்ல; ஆலயங் களின் அமைப்புகளே எல்லா இடங்களிலும் மாறு படும். நாங்கள் நினைத்தபடி கோபுரக் காலசங்களின் எண்ணிக்கைகளை மாற்றி அமைக்க முடியாது நண்பர்களே!!!

கஜ பிருஷ்டம் என்று ஓர் உருவ அமைப்பு உண்டு. கோபுரம் என்று உண்டு. கோபுர வாசல் என்று இருக்கும். ஒன்றில் துவஜஸ்தம்பம் இருக்கும். ஒன்றில் தீபஸ்தம்பம் என்று இருக்கும். பிராகாரம் இல்லாத கோயில் உண்டு. இவற்றை எல்லாம் ஆகம சாஸ்திரம் விரிவாகச் சொல்லும்.

கோபுரக் கலசத்தின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பது, உள்ளே இருக்கும் ஸ்வாமியின் பிம்பம்தான். எத்தனை அங்குல மூர்த்திக்கு எத்தனை கலசம் என்ற அளவுப் பிரமாணங்களும் திட்டவட்டமான சட்ட திட்டமும் உண்டு. அதை அறிய ஆகம சாஸ்திரம் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில்தான் கோபுரங்களின் மேலே உள்ள கலசங்கள் அமைய வேண்டும்!!!

தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின் இதழ் ஆசிரியர்.