தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
புது மணப்பெண் வருகையும் நெல்லும்!!!
நண்பர் ஒருவர் கேட்டிருந்தார் பின்வருமாறு:- திருமணமாகி மணமக்கள்
வீட்டினுள் நுழையும்போது வாசலில் மணமகள்
நிறைநாழியை காலால் தட்டிவிட்டு வருவது எதைக் குறிக்கிறது ???
இது தமிழர்களின் பண்பாடு / கலாச்சாரம் அல்ல! இந்த வழக்கம் இலங்கையிலோ , ஈழத்திலோ, அல்லது தமிழ் நாட்டிலோ இல்லை!!!
இது முழுக்க முழுக்க வட இந்திய கலாச்சாரம்! பிரதானமாக மகாராஷ்டிர மாநில மக்களின் கலாச்சாரம். அந்த நெல்லை அப்படி பரப்பி விதைத்தால் எப்படி முளை விட்டு வளருமோ அது போல தம்பதிகளின் வாழ்க்கை செழிக்க வேண்டும் என்ற ஒரு பிரார்த்தனைதான்!
ஆனால் பெரும்பாலும் இன்றைய தமிழ்நாட்டு தொலைக்காட்சிகள் தமது நாடகங்களில் இந்த அனாவசிய கலாச்சாரத்தை புகுத்தி வருகின்றன. கலாச்சார சீர்கேடுகள் பலவற்றை விதைக்கும் இந்த நாடகங்களில் காட்டப்படும் இந்த கோமாளித்தனங்கள் எங்களது குடும்பங்களில் தொற்றாமல் இருந்தால் மகிழ்ச்சியே!!!
கட்டுரையின் சாரம் – நன்றி : பிரம்மஸ்ரீ சேஷாத்திரி நாத சாஸ்திரிகள்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
Comments by Dr. N. Somash Kurukkal