குங்குமம் அணிவது பெண்களுக்கு மட்டும் உரியது என்று யாராவது எண்ணினால் அது மிக மிக தவறாகும்!
பெண்கள் நெற்றியில் குங்குமம் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும், ஆண்கள் நெற்றியில் திருநீறு மட்டுமே அணிய வேண்டும் என்பது தவறான கருத்து. சுமங்கலிப் பெண்களும் சரி, ஆண்களும் சரி நெற்றியில் திருநீறுடன் குங்குமத்தையும் திலகமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
‘மந்திரமாவது நீறு’ என்கிறது தேவாரம். நெற்றியில் நீறு பூசுவதால் நோய்கள் காணாமல் போகின்றன. நமது உடம்பில் வலது மற்றும் இடது புறத்தில் உள்ள நாடிகள் ஒன்றாக இணையும் இடம் நமது நெற்றி.
இதனை சுஷூம்னா என்று அழைப்பர். இந்த பகுதியே இறைவனுக்கு நெற்றிக்கண் அமைந்திருக்கும் இடம். இந்த நெற்றிக்கண்ணைத் திறப்பது என்பது கோபத்தின் வெளிப்பாடு. இந்த நெற்றிக்கண் அமைந்திருக்கும் பகுதியில் சுத்தமான மஞ்சளால் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை தரிக்கும்போது கோபம் தணிகிறது.
உள்ளிருக்கும் கோபம் தணிவதால் முகம் சாந்தமாகிறது. திலகமாக நீள வாக்கில் குங்குமத்தை வைத்துக் கொள்வதற்கான தாத்பரியம் என்னவென்றால் அது கண் போன்ற வடிவில் உருவகப்படுத்தி பார்க்கப்படுவதே ஆகும்.
ஆணாகிலும் சரி, பெண்ணாகிலும் சரி, நெற்றியில் திருநீறு பூசி குங்குமத்தை திலகமாக வைத்திருப்பவர்களைக் கண்டதும் நம்மையும் அறியாமல் அவர்களை கையெடுத்து வணங்கத் தோன்றுகிறது அல்லவா? கண்ணைப் போன்ற வடிவில் திலகமாக வைத்துக் கொள்ளவில்லை என்றாலும், கருவிழியாக பாவித்து குங்குமத்தை வட்ட வடிவில் வைத்துக்கொள்வதும் நல்லது.
நாகரிகம் என்ற பெயரில் டிசைன், மாடல் என்ற எண்ணத்தோடு வெவ்வேறு வடிவிலான ஸ்டிக்கர் பொட்டுகளை வைத்துக் கொள்வதும் பெண்களின் முகக்களையினைப் போக்குவதோடு அவர்கள் வாழ்விலும் விரும்பத்தகாத பலன்களை அளித்துவிடும் என்பதை உணர வேண்டியது அவசியம். ஆண்களும் சரி, பெண்களும் சரி திருநீறுடன் குங்குமத்தையும் தரித்துக் கொள்வதே நல்லது.
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture.Org.
www.modernhinduculture.com
Comments by Dr. N. Somash Kurukkal