ஜாதகம் கணிக்க என்று பலர் பல ஜோதிடர்களிடம் சென்று வருவதை நாம் பார்த்திருக்கிறோம். ஜோதிடர் சிலர் ஜாதகம் கணிக்கும் போது ஆயுள் சம்பந்தமாக , குறுகிய ஆயுள் அது இது என்று சொல்வதாக தகவல்கள் உண்டு. மதி நுட்பமாக இந்த விடயங்களை சொல்ல வேண்டும் அப்படி சொல்ல முடியாவிட்டால் அவற்றை தவிர்க்க வேண்டும்.
ஜனனத்தையும், மரணத்தையும் தீர்மானிக்கும் சக்தி இறைவன் ஒருவனுக்கே உண்டு. அதை எந்த ஒரு மனிதனாலும் தீர்மானிக்க இயலாது. அதே நேரத்தில் ஒரு ஜோதிடர், ஒரு மனிதனின் ஜாதகத்தை கணிக்கும்போது இந்த நேரத்தில் இந்த மனிதனுக்கு கெண்டம் உருவாகும் என்று கணக்கிட்டுச் சொல்ல முடியும். ஜோதிடத்தின் அடிப்படை விதி நன்மைகளை தெள்ளத் தெளிவாகவும், தீய பலன்களை இலைமறை காய்மறையாகவும் சொல்ல வேண்டும் என்பதே ஆகும்.
இளம் வயதிலேயே ஒரு ஜாதகனுக்கு மாரகம் ஆகிய கண்டம் உருவாகும் எனும் பட்சத்தில் அதை கணிக்கும் ஜோதிடர் அந்த ஜாதகரை ஜாக்கிரதையாக இருக்கச் செய்வதற்காக, அந்த மனிதனை அதிகமாக பயமுறுத்தாத வகையில் அறிவுரைகளைச் சொல்லவேண்டும். ஒரு மனிதனின் ஆயுளை தீர்மானிக்கும் சக்தி ஜோதிடருக்கு கிடையாது. அவ்வாறு தீர்மானிக்கும் திறன் கடவுளுக்கு மட்டுமே உண்டு.
Comments by Dr. N. Somash Kurukkal