தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
அறிவு புலன்கள் கழுத்துக்கு மேலும், செயல் புலன்கள் உடலிலும் இருக்கும். வேதம் சொல்லும் கர்ம காண்டம் மற்றும் ஞான காண்டம் என்ற பிரிவுகளே உடலும், தலையுமாகக் காட்சியளிக் கின்றன. வேதத்தின் கடைசிப் பகுதி உபநிடதம். அதற்கு, ‘வேத சிரஸ்’ என்று பெயர். அது அளவிலும், கருத்தாழத்திலும் மிகப் பெரியது. இதைச் சுட்டிக்காட்ட யானைத் தலையுடன் பிள்ளையார் காட்சியளிப்பது பொருந்தும்.
உடல் செயல்பட தலையும்; தலை செயல்பட உடலும் வேண்டும். அதாவது உழைப்பும் (செயல் புலன்களும்) வேண்டும்; அறிவும் (அறிவுப் புலன்கள்) வேண்டும். காலையில் நீராடியதும், நமது உழைப்பும் அறிவும் சிறப்புற்று விளங்க விநாயகரைப் பணிவது சிறப்பு. அதற்கேற்ப நீர் நிலை களின் அருகில் அமர்ந்து நமக்காகக் காத்திருக்கிறார் அவர்.
—ஆன்மிக இதழ் ஒன்றிலிருந்து.
Comments by Dr. N. Somash Kurukkal