தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
மகா சாஸ்தாவுக்கு எட்டு அவதாரங் கள் உண்டு. அவை: ஆதி சாஸ்தா, கால சாஸ்தா, பால சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, ஆர்ய சாஸ்தா, விஸ்வ சாஸ்தா, கிராத சாஸ்தா மற்றும் புவன சாஸ்தா.
* ஆதி சாஸ்தாவுக்கு பூர்ணா-புஷ்கலா என்ற இரு மனைவியர் உண்டு. அச்சன்கோவில் முதலான தலங்களில் உள்ள திருவடிவம் இதுவே. இந்த ஆதி சாஸ்தாவையே தமிழகத்தில் ஐயனார் என்று அழைத்தார்கள்.
கால சாஸ்தாவை வழிபடுவதால் எதிரி களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்; யம பயம் விலகும்.
* பால சாஸ்தா பால் கிண்ணத்தைக் கையில் ஏந்தி, குழந்தை வடிவில் காட்சி தருபவர். ஞானத்தையும் வெற்றியையும் தரக்கூடியவர். நோய்களையெல்லாம் நீக்கும் இவரையே ‘தந்வந்த்ரி சாஸ்தா’ என்றும் அழைப்பர். தகழி, த்ருப்ரயார் ராம க்ஷேத்ரம் முதலான பல தலங் களில் இவர் காட்சி தருகிறார்.
* சம்மோஹன சாஸ்தா சகலவிதமான செளக்கியங்களையும் தந்து நல்வாழ்வு அருளக் கூடியவர்.
ஆர்ய சாஸ்தா எனும் அவதாரத்தில் சாஸ்தாவுக்கு ‘ப்ரபா’ என்ற மனைவியும் `ஸத்யகன்’ என்ற மகனும் உண்டு. இவர் குழந்தை பாக்கியமும் தரக்கூடியவர்.
பகவான் வேட்டைக்காரனாக காட்சிதரும் கோலம் – கிராத சாஸ்தா திருக்கோலமாகும். எருமேலி முதலான தலங்களில் இந்தத் திருவடி வில் சாஸ்தாவைக் காணலாம்.
* புவன சாஸ்தாவாக அவதரித்த வேளையில் மதனா – வர்ணினீ என்ற இரு மனைவியரைக் கொண்டதாக சுப்ரபேத ஆகமம் கூறுகிறது.
* மஹிஷி சம்ஹாரத்தின் பொருட்டு ராஜசேகர பாண்டியனுக்கு மகனாகத் தோன்றியதே ஸ்ரீசாஸ்தாவின் மணிகண்ட அவதாரம். இதுவே கலியுக அவதாரம். இந்த அவதாரத்திலேயே நைஷ்டீக ப்ரம்மசர்யத்தைக் கடைப்பிடிக்கிறார் ஐயன்.
–ஆன்மிக இதழ் ஒன்றில் இருந்து.

Comments by Dr. N. Somash Kurukkal