தெரிந்து கொள்வோம் நண்பர்களே:-

அரச மரம் வேள்விக்குப் பயன்படும். மும்மூர்த்திகளின் மொத்த உருவம் அது (மூலதோ பிரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே. அக்ரத சிவரூபாய விருஷ ராஜா யதே நம). ‘முத்தொழிலுக்கும் நானே பொறுப்பு!’ என்பது போல் அதன் அடியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் பிள்ளையார்.

நீராடியவுடன் முதல் வேலையாக விநாயகரை வலம்வந்து தலையில் குட்டிக்கொள்ள வேண்டும். வலம்வருவது நமது உழைப்பைச் சிறப்பிக்க. தலையில் குட்டிக்கொள்வது நமது சிந்தனையைச் சிறப்பிக்க. ஆம், நமது அடிப்படைத் தேவையை முழுமையாக அளிப்பவர் பிள்ளையார்