தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
ஆயுஷ்ய ஹோமம்:-
ஆயுஷ்ய ஹோமத்தின்போது ‘ஆயுஷ்ய சூக்தம்’ என்ற மந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். ஓர் உயிரைக் கருவில் உருவாக்கச் செய்வது; அந்தக் கரு நல்ல முறையில் வளர உதவுவது;
கருவில் வளர்ந்த குழந்தையை உரிய நேரத்தில் பிரசவத்தின் மூலம் இந்த உலகைப் பார்க்கச் செய்வது; அந்தக் குழந்தைக்கு அழகையும், அறிவையும், ஆரோக்கியத்தையும் அளித்து நீண்ட காலம் வாழச் செய்வது… இப்படி எல்லாமே இறைவ னின் கையில்தான் இருக்கின்றன. இவ்வளவையும் தந்த இறைவனுக்கு நன்றி சொல்வதோடு, ஆயுளையும் பலமாக்கிக்கொள்ளவே ஆயுஷ்ய ஹோமம் செய்யப்படுகிறது.
அதே சமயம் வயது வந்தவர்களும் ஆயுள் விருத்திக்காக ஆயுஷ்ய ஹோமம் செய்வதும் வழமையில் உள்ளது.
நன்றி: வித்யாவாருதி சுப்ரமணிய சாஸ்திரிகள்.
தகவல் தொகுப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.
Comments by Dr. N. Somash Kurukkal