தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
தீர்த்த உத்சவமும் சூர்ணோற்சவமும்!
நண்பர்களே, இன்றைய கால கட்டத்தில பல ஆலயங்களில் வருடாந்த மஹோத்சவம் தேர் , தீர்த்தம் என்ற விழாக்கள் நடைபெறுவதை நீங்கள் பார்த்து வணங்கிக் கொண்டிருப்பீர்கள்!
இன்று சூர்ணோற்சவமும் தீர்த்தத் திருவிழாவும் என்பதைப் பற்றி அறிவோம்!
மறைத்தலாகிய தொழிலைக் குறிப்பது சூர்ணோற்சவம். ஆன்மாக்களை ஆணவமாதி மலங்களில் அழுந்தச் செய்து அநுபவ வாயிலாக இறையுணர்வு பெறச் செய்வத்தே ஆண்டவனின் அருள் நோக்கம்.
“நல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்ல” என்ற ஆன்றோர் வாக்கு நோக்கற்பாலது. துன்பத்தின் பின்னர்தான் இன்பத்தை நன்கு அனுபவிக்கலாம்.
உடலைப் பற்றியுள்ள அழுக்குகளோடு மன அழுக்குகளான காமம், குரோதம் முதலியனவற்றையும் நீக்குவதற்கு அடையாளமாகத் திருப்பொற்சுண்ணம் இடித்து இறைவனுக்குச் சாத்தப்பெறுகின்றது. இறைவனை புனித நீராட்டி நாமும் தீர்த்தமாடுகின்றோம்.
சூர்ணம் என்பது தூள். பொன்நிறமான பொடி என்பது பொன்வண்ணச் சுண்ணம் எனக் கூறப்பட்டுப் பின்னர் போற்சுண்ணம் என மருவியது.
மஞ்சட்பொடி முதலியவற்றைத் தயார் செய்து வைத்திருந்து சவர்க்காரம் பூசிக் குளிப்பதுபோல முற்காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளார்கள். அதனையே இங்கு திருப்பொற்சுண்ணத்திற்குப் பயன் படுத்துகின்றோம். தீர்த்தத் திருவிழா அருளலைக் குறிக்கும்.
தீர்த்த உற்சவம் மற்றும் செம்பொற் சுண்ணம் என்பவை இந்து / சைவ ஆலயங்களில் நடைபெறும் பெருவிழாக்களின் நிறைவுப் பகுதிக் கிரியைகளைக் குறிக்கும் ஆன்மீகச் சடங்குகளாகும்.
இவை தீர்த்தவாரி, மஞ்கள் நீராட்டு மற்றும் சுண்ணம் இடித்தல் போன்ற ஐதீக நிகழ்வுகளை உள்ளடக்கியவை.
தீர்த்த உற்சவம் (தீர்த்தவாரி)
அருளல் நிலை: விழாவின் நிறைவில் எம்பெருமான் நீர்நிலைகளுக்கு எழுந்து சென்று அடியார்களுக்கு அருள்பாலிப்பதே தீர்த்த உற்சவமாகும்.
புனித நீராட்டு: பெருவிழா கண்ட மூர்த்திகளுக்குக் குளங்கள் அல்லது நதிக்கரைகளில் சிறப்பு அபித்காரமும் புனித நீராட்டும் (தீர்த்தவாரி) நடைபெறும்.
பாப நிவர்த்தி: இந்நாளில் புனித நீரில் நீராடுவது ஆன்ம தூய்மையையும் பாவ விமோசனத்தையும் தரும் என்பது ஐதீகம்.
செம்பொற் சுண்ணம்
மகிழ்ச்சி வெளிப்பாடு: உற்சவம் நிறைவடைந்த பின் இறைவனின் திருமேனி குளிர்விக்கப்பட்டு, நறுமணப் பொடிகள் மற்றும் செம்பொற் சுண்ணம் சாற்றும் நிகழ்ச்சி நடக்கும்.
நறுமணப் பொடி: மஞ்சள், பச்சை கற்பூரம், ஜவ்வாது மற்றும் தங்கப் பொடிகள் கலந்த மங்களப் பொடியே ‘செம்பொற் சுண்ணம்’ எனப்படுகிறது.
நிறைவு வழிபாடு: நறுமணங்களுடன் கூடிய இச்சடங்குகளினால் மகிழ்வடைந்து, ஊடல் தீர்ந்து இறைவன்-இறைவி மகிழ்ச்சியடையும் என்பதுதான் ஐதீகம் ! திருவிழாவின் இறுதிப் பகுதி இதன் மூலம் நிறைவுபெறும்.
ஆன்மீக நூல்களில் இருந்து தொகுப்பு!-
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com See less
See less
Comments by Dr. N. Somash Kurukkal