வாழ்த்துகிறோம்!!!
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனத் தலைவர் ( Modern Hindu Culture . Org) சிவாகம கலாநிதி முத்தமிழ்க் குருமணி சிவஸ்ரீ டாக்டர் நா. சர்வேஸ்வர சிவாச்சார்யார் தலைமையில் நடைபெற்ற விழாவில், சுன்னாகம் மயிலணி கந்தசாமி கோவில் பிரதமகுரு ‘ வைதீக ரத்னா ‘ சிவஸ்ரீ வரத உமாசுத சிவாச்சார்யார் அவர்கள் முத்தமிழ்க் குருமணி அவர்களினால் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பெற்று , சிவஸ்ரீ வரத உமாசுத சிவாச்சார்யார் அவர்களின் அளப்பரிய வைதீக குருத்துவத்தைப் பாராட்டி ” வைதீக வித்யா பூஷணம்” என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டர்!!!
01/07/2026 அன்று , கோப்பாய் சிவஸ்ரீ சந்திர சாந்தரூப சிவாச்சார்யார் இல்லத்தில் நடைபெற்ற உபநயன வைபவத்தின் போது நடைபெற்ற இந்த பட்டமளிப்பு நிகழ்வின் போது, யாழ் பல்கலைக் கழக சமஸ்கிருதத்துறைத் தலைவர் ப்ரம்மஸ்ரீ சு. நவநீதகிருஷ்ண சர்மா, வாழ்நாள் பேராசிரியர் ப்ரம்மஸ்ரீ கோபாலகிருஷ்ண ஐயர் , யாழ் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடாதிபதி ப்ரம்மஸ்ரீ பத்மநாப சர்மா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்!
‘வைதீக வித்யா பூஷணம்’ ‘வைதீக ரத்னா ‘ சிவஸ்ரீ வரத உமாசுத சிவாச்சார்யார் அவர்கள் தனது இணைபிரியா துணையாகிய ஸ்ரீமதி மதிவதனா உமாசுதக் குருக்கள் சகிதம் நலமாக , மகிழ்வாக , மேன்மையாக மென்மேலும் தனது வைதீக தர்ம கைங்கரியங்களை தொடர்ந்து நடத்திட எல்லாம் வல்ல சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகாதேவி உடனுறை ஸ்ரீ பொன்னம்பலவாண வேண்டி வணங்கி வாழ்த்துகிறோம்.
Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம், சுன்னாகம், இலங்கை.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யார் ஸ்ரீமதி காஞ்சனா அம்மா தம்பதிகள்.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சர்வேஸ்வர சிவாச்சார்யார் ஸ்ரீமதி சாந்தாதேவி அம்மா தம்பதிகள்.
நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள ஆன்மீக மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com
See less
Comments by Dr. N. Somash Kurukkal